பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி, பாதுகாப்புப் படை வீரர்களுக்கு விருது வழங்கும் விழாவில் (முதற்கட்டம்) கலந்துகொண்டார். இவ்விழாவில் நமது துணிச்சல் மிக்க வீரர்களுக்கு வீரதீரச்செயல்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
அவர்களின் அபாரமான துணிச்சல், அர்ப்பணிப்பு, தேசத்திற்கான தன்னலமற்ற சேவை ஆகியவை குறித்துப் பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“நமது துணிச்சல் மிக்க வீரர்களுக்கு 2026-ம் ஆண்டுக்கான வீரதீரச் செயல்களுக்கான விருதுகள் வழங்கப்பட்ட பாதுகாப்புப் படை விருது வழங்கும் விழாவின் முதல் கட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அவர்களின் அசாத்திய துணிச்சல், அர்ப்பணிப்பு, தேசத்திற்கான தன்னலமற்ற சேவை குறித்து நாம் பெருமிதம் கொள்கிறோம்.”
(Release ID: 2270500)
***
TV/PLM/SH
Attended the Defence Investiture Ceremony 2026 (Phase-1) where Gallantry Awards were conferred upon our brave personnel. We are proud of their extraordinary courage, commitment and selfless service to the nation. pic.twitter.com/kvnW6dmXwa
— Narendra Modi (@narendramodi) June 8, 2026