Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாரத் சேவாஷ்ரம் சங்கம் நூற்றாண்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை (காணொலி காட்சி மூலமாக)

பாரத் சேவாஷ்ரம் சங்கம் நூற்றாண்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை (காணொலி காட்சி மூலமாக)


இன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், காணொலி காட்சி மூலம் பாரத் சேவாஷ்ரம் சங்கம் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சி ஷில்லாங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிகழ்ச்சிக்கு பிரதமரை வரவேற்று பேசிய பாரத் சேவாஷ்ரம் சங்கத்தின் பொதுச் செயலாளர், ஸ்ரீமத் சுவாமி பிஸ்வத்மானந்தா ஜி மகராஜ், இந்தியாவின் புகழ்மிக்க ஆன்மிகம் மற்று சேவை பராம்பரியங்கள் குறித்து பேசினார்.

கூடியிருந்தவர்களிடையே பேசிய பிரதமர், குஜராத்தில் தாம் பாரத் சேவாஷ்ரம் சங்கத்துடன் இணைந்து பணியாற்றியதை நினைவு கூர்ந்தார். இந்நிகழ்ச்சியையொட்டி, பாரத் சேவாஷ்ரம் சங்கத்திற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்த அவர், சேவை மற்றும் உழைப்பு ஆகிய பண்புகளை சங்கம் ஒருங்கே கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

அவர், இச்சங்கத்தின் பணிகள் வட-கிழக்கு பகுதிகளில், குறிப்பாக பேரழிவு காலகட்டத்தில், பாராட்டுக்குரியது என்றார்.

வேதங்களில் விவரித்தவாறு, ஏழைகள் மற்றும் தேவையுற்றோருக்கு பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை பிரதமர் எடுத்துரைத்தார்.

அவர், பாரத் சேவாஷ்ரம் சங்கத்தின் நிறுவனர் சுவாமி பிரணவானந்தா, நூறாண்டுகளுக்கு முன்பாகவே சமூக நீதி குறித்து பேசியுள்ளார் என்றும், அதற்காகவே இச்சங்கத்தினை தோற்றுவித்தார் என்றும் தெரிவித்தார்.

பிரதமர், சமீபகாலங்களில், “சேவை” மற்றும்
“ஆன்மிகம்” ஆகியவை இரண்டும் வெவ்வேறானவை என்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். பாரத் சேவாஷ்ரம் சங்கம் இந்த மாயையை தனது பணியின் மூலம் உடைத்தெறிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சுவாமி பிரணவானந்தா ‘பக்தி’, ‘சக்தி’ மற்றும் ‘மக்கள் சக்தி’ ஆகியவை மூலம் சமூக வளர்ச்சியை அடைந்துள்ளார் என பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர், குறிப்பாக வடகிழக்கு இந்தியாவில் பாரத் சேவாஷ்ரம் சங்கம், “ஸ்வச்சாக்ரஹ்”-சுத்தம் குறித்த பணியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். அரசு வடகிழக்கை வளர்ச்சியடைய செய்ய உறுதிபூண்டுள்ளதை குறித்து பேசிய அவர், தெற்காசியாவின் நுழைவாயிலாக வடகிழக்கு பகுதியை உருவாக்கும் வகையில், இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மீது கவனம் செலுத்தப்படுவதாக கூறினார்.

இந்நிகழ்ச்சியில், குஜராத்தில் பிரதமருடன் பணியாற்றியவரும், பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டவருமான ஸ்ரீமத் சுவாமி அம்பாரீஷனந்தா ஜி மகராஜ் நன்றியுரை நிகழ்த்தினார்.

****