Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாரிசில் காப்-21 மாநாடு – பிரதமர் மோடி பங்கேற்பு

பாரிசில் காப்-21 மாநாடு – பிரதமர் மோடி பங்கேற்பு

பாரிசில் காப்-21 மாநாடு – பிரதமர் மோடி பங்கேற்பு


பிரான்ஸ் தலைநகரான பாரிசில் வரும் 30-ஆம் தேதி நடக்கவுள்ள சுற்றுசூழல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த காப்-21 உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். பிரான்ஸ் அதிபர் திரு. பிரான்காய்ஸ் ஹோலாந்துடன் இணைந்து சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு சந்திப்பை நடத்துவார். பிறகு, அமெரிக்க அதிபர் நடத்தும் ‘புதுமை இயக்கம்’ சந்திப்பிலும் பங்கேற்பார்.

“காப்-21 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பாரிசுக்குப் புறப்படுகிறேன். இந்த மாநாட்டில் சுற்றுசூழல் மற்றும் பருவநிலை மாற்றும் தொடர்பான நமது முக்கிய பிரச்சனைகளை எடுத்துரைப்பேன்.

இயற்கை மற்றும் சுற்றுசூழலுடன் இந்தியாவிற்கு இணக்கத்தையும் பருவநிலை மாற்றத்தின் அளவினை குறைக்க இந்தியா கொண்டுள்ள உறுதிபாட்டினையும் எடுத்துரைக்கும் இந்திய நினைவிடத்தை காப்-21-ல் துவக்கி வைப்பேன்.

அதிபர் திரு. பிரான்காய்ஸ் ஹோலாந்துடன் இணைந்து சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு சந்திப்பை நடத்துவேன். அமெரிக்க அதிபர் நடத்தும் ‘புதுமை இயக்கம்’ சந்திப்பிலும் பங்கேற்பேன்”, என்று பிரதமர் தனது டுவிட்டரில் எழுதியுள்ளார்.

*****