Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாலி மெட்டாலிக் சல்பைடு அகழ்வுக்காக சர்வதேச கடல்படுகை ஆணையத்தோடு இந்தியா மேற்கொண்ட உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சவை ஒப்புகை


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, மத்திய புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் சர்வதேச கடல்படுகை ஆணையத்தோடு இணைந்து 10,000 சதுர கிலோமீட்டரில் பாலி மெட்டாலிக் சல்பைடு தொடர்பான அகழ்வாய்வில் 16 ஆண்டுகள் ஈடுபடுவதற்காக கையெழுத்திட்ட உடன்படிக்கையில் ஏற்பளித்தது. இந்த அகழ்வாய்வு இந்திய கடற்பகுதியில் மத்திய, தெற்கு மற்றும் மேற்கு முகடுகளில் மேற்கொள்ளப்படும்.

15 ஆண்டுகளுக்கான இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், இந்திய கடற்பகுதியில் மத்திய, தெற்கு மற்றும் மேற்கு முகடுகளில் பாலி மெட்டாலிக் சல்பைட் ஆராய்ச்சியில் ஈடுபட இந்தியாவுக்கு பிரத்யேக உரிமை கிடைக்கும். மேலும் இந்திய கடற்பகுதியில் செயல்பட்டு வரும், சீனா, கொரியா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு சமமாக இந்தியாவும் செயல்பட முடியும். மத்திய பூமி அறிவியல் அமைச்சகத்தால் இத்திட்டம், பல்வேறு தேசிய ஆய்வகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களோடு இணைந்து செயல்படுத்தப்படும்.

பின்னணி :

ஆழ்கடற்படுகை பாலி மெட்டாலிக் சல்பைடுகள், இரும்பு, செம்பு, துத்தநாகம், வெள்ளி, தங்கம் மற்றும் பிளாட்டின உலோகங்களைக் கொண்டவையாகும். ஆழ்கடல் பகுதியில் இருந்து சிம்னிகள் வழியாக வெளிப்படும் வெப்பமான திரவங்களில் இது கிடைக்கிறது. கடல் முகடுகளில் உள்ள இந்த பாலி மெட்டாலிக் சல்பைடுகள் பல்வேறு நாடுகளால் அவற்றின் வணிக பயன்களுக்காகவும், நீண்ட கால பயன்களுக்காகவும் சர்வதேச சமூகத்தால் கவனம் கொள்ளப்படுகின்றன.

சர்வதேச கடல்படுகை ஆணையம், ஐக்கிய நாடுகள் அவையின் கடல்களுக்கான சட்டத்தின் கீழ் மத்திய பூமி அறிவியல் அமைச்சகத்தால் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தின்படி, 15 ஆண்டுகளுக்கு 10,000 சதுர கிலோமீட்டரில் பாலி உலோக சல்பைடுகள் அகழ்வாய்வில் ஈடுபட அனுமதி அளித்துள்ளது. இந்திய பெருங்கடலில் உள்ள, மத்திய கடல் முகடு மற்றும் தென்மேற்கு முகடுகளில் இந்தியா பாலி உலோக சல்பைடுகளுக்காக அகழ்வாய்வு மேற்கொள்ள முடியும். சர்வதேச கடல்படுகை ஆணையம், சர்வதேச கடலில் உள்ள உயிரற்ற பொருட்களை கட்டுப்படுத்துகிறது.