பி.எம்.இந்தியா
இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்படையின் தலைமை இயக்குநர் திரு. ஆர். கே. பச்நந்தா, புதுதில்லியில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்து, பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு ரூ.8.5 கோடி வழங்குவதற்கான காசோலையை வழங்கினார். இந்த நிதி இந்தோ-திபெத்திய காவல்படை வீரர்களின் நன்கொடை மூலம் திரட்டப்பட்டதாகும்.