பிரதமரின் பிரான்ஸ் பயணத்தின் போது கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பட்டியல் (ஆகஸ்ட் 22, 2019)
22 Aug, 2019
இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை மற்றும் பிரான்ஸ் அரசின் தேசிய கல்வி மற்றும் இளைஞர் துறை இடையே, திறன் மேம்பாடு மற்றும் தொழிற் பயிற்சியில், ஒத்துழைப்புக்கான நிர்வாக ஏற்பாடு.
இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைக்கு உட்பட்ட, தேசிய சூரியசக்தி நிறுவனம் மற்றும் பிரான்ஸ் அரசின் மாற்று எரிசக்தி மற்றும் அணுசக்தி ஆணையத்திற்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
இந்தியாவின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு உட்பட்ட தன்னாட்சி அறிவியல் நிறுவனமான, அதிநவீன மதிப்பீட்டுக்கான மேம்பாட்டு மையம் மற்றும் ஏடிஓஎஸ் இடையே ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம்.
ஆழ்கடல் எல்லை விழிப்புணர்வு பணியை கூட்டாக மேற்கொள்வது தொடர்பாக, இஸ்ரோ மற்றும் சிஎன்இஎஸ் அமைப்புகளிடையேயான செயலாக்க ஏற்பாடு.