Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் ஆறு ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் : பயனாளிகளுக்கு பிரதமர் வாழ்த்து


பிரதமரின் ஸ்வநிதி திட்டம் தொடங்கப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, சாலையோர வியாபாரிகளின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தத் திட்டம், சாலையோர வியாபாரிகளுக்குப் பிணையமற்ற கடன்  கிடைப்பதை உறுதி செய்ததுடன், நிதி உள்ளடக்கம், தொழில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது. நம்பிக்கை, கண்ணியம், அதிகாரமளித்தல் ஆகியவற்றை அடிப்படையாக இத்திட்டம் கொண்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இதுகுறித்து பிரதமர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் ஆறாவது ஆண்டு நிறைவை இன்று நாம் கொண்டாடுகிறோம். சாலையோர வியாபாரிகளுக்கு எந்தவிதப் பிணையமும் இன்றி கடன் வசதியைப் பெற்றுத்தந்து, அவர்களை நிதிச் சேவைகளில் இணைத்து, தொழில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தந்ததன் மூலம் இத்திட்டம் எண்ணற்றவர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளது. நம்பிக்கை, கண்ணியம், அதிகாரமளித்தலை அடிப்படையாகக் கொண்டதே இந்தத் திட்டம். தங்களின் விடாமுயற்சியாலும், தொழில் முனைவாலும் நம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி வரும் அனைத்துப் பயனாளிகளுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

***

(Release ID: 2267404)
SS/VK/KR