பி.எம்.இந்தியா
இந்தியாவில் நடைபெற்ற 17-வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கயல் வாங்சுக் நேற்று (23.05.2019) வாழ்த்துத் தெரிவித்தார்.
பிரதமர் திரு மோடியின் தலைமையின் கீழ் இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கும் வளத்திற்கும் தனது நல்வாழ்த்துகளை மன்னர் தெரிவித்துக்கொண்டார்.
மன்னரின் வாழ்த்துகளுக்கு பிரதமர் திரு மோடி நன்றி தெரிவித்தார். பூடானுடனான தனித்துவம் மிக்க சிறப்பான நட்புக்கு இந்திய அரசு உயரிய முக்கியத்துவத்தை அளிப்பதாக பிரதமர் கூறினார். இருநாடுகளுக்கு இடையேயான பங்களிப்பை மேலும் உயரிய நிலைக்கு கொண்டுசெல்ல பூடான் அரசாட்சியோடு தொடர்ந்து பணியாற்ற விரும்பும் இந்திய அரசின் உறுதிப்பாட்டையும் பிரதமர் வலியுறுத்தினார்.
———–
அரவி/எல்கே/கீதா