Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமருடன் ஜமியாத் உலாமா-ஐ- ஹிந்த் தலைவர்கள் சந்திப்பு

பிரதமருடன் ஜமியாத் உலாமா-ஐ- ஹிந்த் தலைவர்கள் சந்திப்பு


ஜமியாத் உலாமா-ஐ- ஹிந்த் அமைப்பைச் சேர்ந்த இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த 25 தலைவர்கள், பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.

குழுவினரை வரவேற்ற தேசிய பாதுகாப்பு ஆலோசர் திரு.அஜித் தோவல், உலகம் முழுமையும் இன்று இந்தியாவை உற்றுநோக்குவதாகவும், தேசத்தை முன்னெடுத்து செல்வது இந்திய சமூகத்தை சேர்ந்த அனைத்து பிரிவினரின் பொறுப்பாகும் என்றார்.

குழுவை சேர்ந்த தலைவர்கள் திரு.தோவலின் கருத்தை ஒப்புக்கொண்டனர். அவர்கள் பிரதமரின், அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற அறைகூவலைத் தொடர்ந்து அனைவரும்

ஒன்றாக நாட்டை முன்னெடுத்து செல்வதை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

பிரதமரின் கனவை பாராட்டிய குழுவின் உறுப்பினர்கள், நாட்டு மக்கள் அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் மூலம் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கு அவர் வளத்தையும் நல்வாழ்வையும் உறுதி செய்வார் எனக் கூறினர். அவர்கள், புதிய இந்தியாவை உருவாக்கிட இஸ்லாமிய சமூகம் சரிசமமான பங்குதாரராக இருக்க விரும்புவதாகவும் கூறினர்.

தீவிரவாதம் மிகப் பெரிய சவால் எனக் குறிப்பிட்ட அவர்கள், தங்களது அனைத்து முயற்சிகளாலும் அதனை எதிர்க்கொள்ளும் வகையில் பொதுவான தீர்வு ஏற்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர். மேலும், எத்தகைய சூழ்நிலையிலும், நாட்டின் பாதுகாப்பு அல்லது நல்வாழ்வை விட்டுக் கொடுக்காமல் உறுதி செய்வது முஸ்லீம் சமூகத்தின் பொறுப்பாகும் எனக் கூறினர். இந்தியாவிற்கு எதிரான எந்த சதியும் வெற்றி பெறுவதை முஸ்லீம் சமூகம் என்றும் அனுமதிக்காது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள சூழ்நிலை குறித்து கவலை

தெரிவித்த குழுவின் உறுப்பினர்கள், இப்பிரச்சினைக்கு பிரதமர் ஒருவரால் மட்டுமே தீர்வு காண இயலும் எனத் தெரிவித்தனர். மும்முறை தலாக் பிரச்சினையில், பிரதமரின் நிலைப்பாட்டிற்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தனர். கல்வி நிறுவனங்களுடன் தொடர்புள்ள குழுவின் உறுப்பினர்கள்,அரசின் முனைப்புகளான, ரொக்கமில்லா பரிமாற்றங்கள், புதிய துவக்கங்கள், மற்றும் நிதி ஆயோக் சமீபத்தில் கூட்டிய ஹக்கத்தான் போன்றவற்றில் தங்கள் நிறுவனங்கள் கண்டுள்ள முன்னேற்றம் குறித்து எடுத்துரைத்தனர்.

மத்திய அரசின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் சிறுபான்மையினர் நல்வாழ்வுத் திட்டங்களை குழுவினர் பாராட்டினர்.

குழுவின் உறுப்பினர்களை வரவேற்ற பிரதமர், ஜனநாயகத்தின் மிகப் பெரிய சக்தி நல்லிணக்கம் மற்றும் அமைதி என்றார். குடிமக்களிடையே வேறுபாடு காண்பதற்கு அரசிற்கு எந்தவித உரிமையும் இல்லை என்பதை வலியுறுத்திய பிரதம மந்திரி, இந்தியாவின் சிறப்புத்தன்மையே வேற்றுமையில் ஒற்றுமை என்பதாகும் என்றார். அவர், இந்தியாவின் புதிய சந்ததியினர், வளர்ந்து வரும் உலகாளவிய தீவிரவாதத்திற்கு இரையாக அனுமதிக்கக் கூடாது என்றார். மும்முறை தலாக் குறித்து பிரதமர், இஸ்லாமிய சமூகத்தினர் இப்பிரச்சினையை அரசியலாக்கக்கூடாது என வலியுறுத்தியதுடன், இது தொடர்பான மாற்றங்களை துவங்கிடும் பொறுப்பை குழுவினர் ஏற்கவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

ஜமியத் உல்மா-ஐ- ஹிந்தின் தலைவர், மவுலானா குவாரி சையத் முகமது உஸ்மான்; ஜமியத் உல்மா-ஐ- ஹிந்தின் பொதுச் செயலாளர் மௌலானா முகமது ஏ மதானி; மும்பை, அஞ்ஜுமன்-ஐ- இஸ்லாமின் தலைவர் டாக்டர்.ஜாகீர் ஐ காஜி; பேராசிரியர் அக்தருல் வாசி; மற்றும் மவுலானா பதாருதீன் அஜ்மல் உள்ளிட்டோர் இக்குழுவின் உறுப்பினர்களாக இடம் பெற்றிருந்தனர்.

****