Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் இன்று லக்னோவிற்கு பயணம்; நாளை யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்


பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று லக்னோவிற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யோகா தின நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இன்று மாலை, பிரதமர் சி.எஸ்.ஐ.ஆர்.- மத்திய மருந்துகள் ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிடுகிறார்.

டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொழில்நுட்ப நிறுவனத்தின் கட்டிடத்தை பிரதமர் துவக்கி வைக்கிறார். லக்னோவில் நடக்க இருக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் 400 கிலோவாட் லக்னோ – கான்பூர் நேர் திசை மின் பகிர்மை இணைப்பினை நாட்டுக்கு அர்பணிக்கிறார்.

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் பயனாளிகளுக்கு வழங்கல் ஆணை கடிதத்தை பிரதமர் வழங்குகிறார்.

நாளை காலை, மூன்றாவது யோகா தினத்தை முன்னிட்டு லக்னோவின் ரமாபாய் அம்பேத்கர் மைதானத்தில் நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
http://nm4.in/dnldapp என்ற செயலி மூலம் கைபேசியில் லக்னோ நிகழ்ச்சிகளை பொதுமக்கள் நேரலையில் காணலாம்.