Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் இஸ்ரேல் வந்தடைந்தார்; பென் கூரியான் விமான நிலையத்தில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது

பிரதமர் இஸ்ரேல் வந்தடைந்தார்; பென் கூரியான் விமான நிலையத்தில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது

பிரதமர் இஸ்ரேல் வந்தடைந்தார்; பென் கூரியான் விமான நிலையத்தில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது

பிரதமர் இஸ்ரேல் வந்தடைந்தார்; பென் கூரியான் விமான நிலையத்தில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது


பிரதமர் திரு.நரேந்திர மோடி, இன்று டெல் அவிவ், நகரில் பென் கூரியான் விமான நிலையத்தை வந்தடைந்ததார்.

பிரதமர் திரு.மோடி வந்தடைந்தவுடன், விரிவான அலுவல் ரீதியான வரவேற்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இஸ்ரேல் பிரதமர் திரு. பெஞ்சமின் நேதன்யாஹூ அவரை வரவேற்றார். பிரதமர் மரியாதை நிமித்தமான அணிவகுப்பை பார்வையிட்டார்.

பிரதமர் திரு. நேதன்யாஹூ, தனது பத்திரிக்கை செய்தியை, “ஆப்கா ஸ்வாகத் ஹே மேரே தோஸ்த்” என்ற இந்தி வார்த்தைகளுடன் துவக்கினார். அவர், பிரதமரை திறந்த கைகளுடன் வரவேற்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பிற்கு வானம் கூட எல்லை இல்லை எனக் கூறினார். அவர் பிரதமரை மிகப் பெருந்தலைவர் மற்றும் “உலகத் தலைவர்” என வர்ணித்தார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் “ஷலோம் லே’குலாம்” என ஹீப்ரூ மொழியில் வாழ்த்துகளைத் தெரிவித்து பேச்சினைத் துவக்கினார், மேலும், ஹீப்ரூ மொழியில் “தான் இஸ்ரேலில் இருப்பதற்காக மகிழ்ச்சியடைந்துள்ளேன” எனவும் தெரிவித்தார்.

அவர், 41 ஆண்டுகளுக்கு முன்பு, ஜூலை 4 அன்று என்.டீ.பி. -யில் இஸ்ரேலிய தாக்குதலில், பல இஸ்ரேலிய பணயகைதிகைளை காப்பாற்றியபோது, தனது இன்னுயிரை நீத்த பிரதமர் திரு. நேதன்யாஹூவின் மூத்த சகோதரரை நினைவுக் கூர்ந்தார்.

நிலையான உயர் வளர்ச்சி மற்றும் அனைத்திலும் வளர்ச்சி என்ற நோக்குடன் கூடிய எங்களது பாதையில், இந்தியா இஸ்ரேலை அதன் முக்கிய கூட்டாளியாக கருதுகிறது என பிரதமர் தெரிவித்தார்.

மேலும் அவர், நாங்கள் பொருளாதார வளர்ச்சிக்காக பரஸ்பர கூட்டுறவை உருவாக்கி வருவதுடன், பயங்கரவாதம் போன்ற பொதுவான அச்சுறுத்தல்களிலிருந்து நமது சமூகத்தை பாதுகாக்கும் வகையிலான ஒத்துழைப்பையும் நல்கி வருகிறோம் என்றார்.

இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை சந்திக்க உள்ள தனது ஆவலை வெளிப்படுத்திய பிரதமர், இந்தியாவை சேர்ந்த யுதர்கள், நமது சமூகங்களை உயர்வாக்கியுள்ளனர் என்றார்.