பி.எம்.இந்தியா
புதுதில்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி, சீன அதிபர் திரு ஜி ஜின்பிங்கைச் சந்தித்தார்.
ஆகஸ்ட் 2025-ல் தியான்ஜினில் நடைபெற்ற தங்களது முந்தைய சந்திப்பிற்குப் பின், இந்திய–சீன இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள சீரான முன்னேற்றத்தைத் தலைவர்கள் வரவேற்றனர். இரு நாடுகளும் தங்கள் உறவுகளை ஒரு உத்திசார்ந்த நீண்டகால கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் என்பதை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். கருத்து வேறுபாடுகள் மோதல்களாக மாறக்கூடாது என்று அவர்கள் வலியுறுத்தினர். பரஸ்பர மரியாதை, உணர்திறன், நலன் ஆகிய மூன்று அம்சங்களின் அடிப்படையில் இரு தரப்பினரும் செயல்பட வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இருதரப்பு உறவுகளின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு எல்லைப் பகுதிகளில் நிலவும் அமைதி மிக அவசியமான அடிப்படை என்று பிரதமர் வலியுறுத்தினார். எல்லை சார்ந்த விவகாரங்களில் ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களையும், புரிதல்களையும் இரு தரப்பினரும் கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார். ஒட்டுமொத்த இருதரப்பு உறவுகளின் அரசியல் கண்ணோட்டம், இரு நாட்டு மக்களின் நீண்டகால நலன்கள் ஆகியவற்றின் அடிப்படையில், எல்லைப் பிரச்சினைக்கு நியாயமான, பகுத்தறிவுமிக்க, பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைக் காண்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் வெளிப்படுத்தினர்.
இரு தலைவர்களும் மக்களிடையேயான உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை எடுத்துரைத்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையே கலாச்சாரப் பரிமாற்றங்கள், வணிகத் தொடர்புகள், மக்களின் போக்குவரத்து ஆகியவற்றை மேலும் ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளைப் பொறுத்தவரை, கட்டமைப்பு ரீதியான வர்த்தகச் சமநிலையின்மை, விநியோகச் சங்கிலி தொடர்பான சிக்கல்கள் உள்ளிட்ட பரஸ்பரக் கவலைகளுக்குத் தீர்வு காண்பதுடன், அர்த்தமுள்ள மற்றும் கணிக்கக்கூடிய வகையிலான சந்தை அணுகலை எளிதாக்குவதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.
பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள், சவால்களை எதிர்கொள்வதில், இரு தரப்பும் தங்களுக்கு இடையிலான பொதுவான புரிதலைத் தொடர்ந்து விரிவுபடுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்திற்கு சீனா அளித்த ஆதரவையும், 2026 பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் வெற்றிக்கு அந்நாடு ஆற்றிய பங்களிப்புகளையும் பிரதமர் பாராட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2309538®=48&lang=1
***
TV/RB/RJ
PM @narendramodi and President Xi Jinping met on the sidelines of the Delhi BRICS Summit today. The two leaders reviewed the full range of India-China relations. pic.twitter.com/qxDhxZZe1k
— PMO India (@PMOIndia) September 12, 2026
Met President Xi Jinping on the sidelines of the Delhi BRICS Summit.
— Narendra Modi (@narendramodi) September 12, 2026
We reviewed the full range of India-China relations.
Also conveyed best wishes for China’s BRICS Presidency that commences next year.
在德里金砖峰会期间,会见了习近平主席。
双方全面回顾了印中关系。… pic.twitter.com/tzqTIMNHGG