Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரிக்ஸ் அமைப்பின் 20 ஆண்டுகளை நினைவுகூரும் அஞ்சல் தலைகள் வெளியீடு


பிரிக்ஸ் அமைப்பின் இருபதாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், புது தில்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, இன்று (12 செப்டம்பர் 2026) இரண்டு நினைவு அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.

 

“BRICS: Two Decades of Cooperation, 2006–2026 / ब्रिक्स: सहयोग के दो दशक, 2006–2026” என்ற வாசகத்தைக் கொண்ட இந்த நினைவு அஞ்சல் தலை, உரையாடல், ஒத்துழைப்பிற்கான ஒரு மதிப்புமிக்க தளமாக பிரிக்ஸ் அமைப்பின் பரிணாம வளர்ச்சியைக் கொண்டாடுகிறது.

 

இந்த இரண்டு அஞ்சல் தலைகளும், “மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மைக்காகக் கட்டமைத்தல்” என்ற கருப்பொருளின் கீழ், இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பு 2026-ன் முன்னுரிமைகளைப் பிரதிபலிக்கின்றன.

 

முதல் அஞ்சல் தலையானது பரஸ்பர மரியாதை, புரிதல், ஒற்றுமை ஆகிய உணர்வுகளுடன் பிரிக்ஸ் ஒரு தளமாக உருவெடுப்பதைக் குறிக்கும் அதே வேளையில், இரண்டாவது அஞ்சல் தலையானது அதன் சின்னத்தையும், இந்தியாவின் தலைமைப் பொறுப்பின் பின்னணியில் உள்ள ‘மனிதநேயமே முதன்மை’, ‘மக்களை மையப்படுத்திய தன்மை’ என்ற பார்வைகளை வெளிப்படுத்துகிறது.

 

(Release ID : 2309506)

****

TV/PLM/SH