Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் தனது உடற்பயிற்சிக் காட்சியை வெளியிட்டார் ஐபிஎஸ் அதிகாரிகளையும் ஈடுபட யோசனை


 

கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சவாலை ஏற்று தனது உடற்பயிற்சி காட்சிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (ஜூன் 13) வெளியிட்டார். அக்காட்சிகள் #FitnessChallenge #HumFitTohIndiaFit என்ற ஹாஷ்டாகில் இடம்பெற்றுள்ளன.

அதில் பிரதமர், “இது எனது காலை நேர உடற்பயிற்சிகள். யோகாசனத்தை முடித்துவிட்டு, பஞ்சபூத நடைப் பயிற்சியை மேற்கொள்கிறேன். இப்படிச் செய்வது மிகுந்த உற்சாகத்தையும் புத்துணர்வையும் ஊட்டுகிறது. அத்துடன் மூச்சுப் பயிற்சியையும் மேற்கொள்கிறேன் ஒவ்வொரு இந்தியரும் இதைப் போல் உடற்பயிற்சிக்காகச் சிறிது நேரம் ஒதுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். உங்களது வசதிக்கு ஏற்ப எந்த வகையான உடற்பயிற்சியையும் மேற்கொள்ளலாம். அப்போது உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சாதகமான மாற்றங்களை நீங்கள் காண்பீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, கர்நாடக முதலமைச்சர் திரு. எச்.டி. குமாரசாமி, டேபிள் டென்னிஸ் வீரர் செல்வி மனிகா பத்ரா மற்றும் நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் அனைவரும் உடற்பயிற்சியில் பங்கேற்கும்படி பிரதமர் அழைப்பு விடுத்தார்.

“கர்நாடக முதலமைச்சர் திரு. எச்.டி. குமாரசாமி, 2018ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுகளில் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்த மனிகா பத்ரா ஆகியோரும் உடற்பயிற்சி செய்யக் கேட்டுக் கொள்கிறேன். தீரம் மிக்க இந்திய காவல் பணியில் உள்ளவர்கள், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோரையும் உடற்பயிற்சியில் பங்கேற்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

***