பி.எம்.இந்தியா
புத்தாண்டை ஒட்டி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொலைபேசி மூலம் கலந்துரையாடினார்.
அதிபர் மேக்ரானுக்கு, தமது சார்பிலும் இந்திய மக்கள் சார்பிலும் பிரதமர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
பியார்ரிட்ஜ் மற்றும் சாண்ட்டிலி உள்பட முன்பு நடந்த சந்திப்புகளை அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார். இந்தியா, பிரான்ஸ் இடையே ராணுவ ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதில் பிரதமர் தனது உறுதியை மீண்டும் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கு இடையில் பல துறைகளில், உறவுகள் உறுதியாக முன்னேறிச் செல்வது குறித்து அவர் திருப்தி தெரிவித்தார்.
இருதரப்பு உறவுகளில் பரஸ்பர அக்கறையான அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். பிராந்திய மற்றும் உலக நிலவரங்கள் பற்றியும் இருவரும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர்.
பாதுகாப்பு, மக்கள் நலன் சார்ந்த வகையில் அணுசக்தி பயன்பாடு மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் அனைத்து வகைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது என்றும், இரு தரப்பும் தொடர்பில் இருப்பது என்றும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
***