Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் திரு நரேந்திர மோடி – மியான்மர் அதிபர் திரு. யூ மின் ஆங் ஹ்லைங் இடையேயான பேச்சுவார்த்தை

பிரதமர் திரு நரேந்திர மோடி – மியான்மர் அதிபர் திரு. யூ மின் ஆங் ஹ்லைங் இடையேயான பேச்சுவார்த்தை


பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று மியான்மர் அதிபர் திரு. யூ மின் ஆங் ஹ்லைங்குடன் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

அதிபர் திரு. யூ மின் ஆங் ஹ்லைங், தனது அதிபர் பதவியேற்பிற்குப் பிந்தைய முதல் வெளிநாட்டுப் பயணத்திற்காக இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததை இந்தியா பெருமையாகக் கருதுவதாகப் பிரதமர் குறிப்பிட்டார். தனது இந்தியப் பயணத்தை, புத்தகயாவில் பகவான் புத்தரின் ஆசியுடன் அதிபர் தொடங்கியதில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின் போது, இரு தலைவர்களும் இந்தியாமியான்மர் உறவுகளின் முழு பரிமாணங்களையும் ஆய்வு செய்ததுடன், இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தனர்.

வர்த்தகம், அரிய வகை மண் தாதுக்கள் , சுகாதாரம், போக்குவரத்து இணைப்பு, பாரம்பரியச் சின்னங்களைப் புதுப்பித்தல் மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன. கடல்சார் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் ஆர்வம் உள்ள பிற துறைகளில் இணைந்து செயல்படவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

மியான்மர், இந்தியாவின்அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’, ‘கிழக்கு நோக்கிய செயல்பாடு’  மற்றும் இந்தோபசிபிக் கொள்கைகளுக்கு மிக முக்கியமானது என்பதைப் பிரதமர் வலியுறுத்தினார். மியான்மருடன் இந்தியா கொண்டுள்ள உறவுகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

பிரதமர் தனது எக்ஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

மியான்மர் அதிபர் திரு. யூ மின் ஆங் ஹ்லைங்குடன் பயனுள்ள ஆலோசனைகளை நடத்தினேன். அதிபராகத் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்கு இந்தியாவை அவர் தேர்ந்தெடுத்ததை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம். தனது பயணத்தை புத்தகயாவில் பகவான் புத்தரின் ஆசியுடன் அவர் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாமியான்மர் உறவுகளின் அனைத்து அம்சங்களையும் நாங்கள் ஆய்வு செய்தோம். இந்தியாவின்அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’, ‘கிழக்கு நோக்கிய செயல்பாடுமற்றும் இந்தோபசிபிக் கொள்கைகளுக்கு மியான்மர் மிக முக்கியமானதாகும்.”

வர்த்தகம், அரிய வகை மண் தாதுக்கள், சுகாதாரம், போக்குவரத்து இணைப்பு, பாரம்பரியச் சின்னங்களைப் புதுப்பித்தல் மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்து எங்கள் பேச்சுவார்த்தைகள் அமைந்தன. கடல்சார் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் பல துறைகளில் இணைந்து பணியாற்றவும் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்.”

இவ்வாறு பிரதமர்  கூறியுள்ளார்.                            

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267674&reg=3&lang=1

***

TV/SE/RJ