Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் திரு. பெஞ்சமின் நேதன்யாஹூவிற்கு பிரதமரின் பரிசுகள்


பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், இஸ்ரேல் பிரதமர் திரு. பெஞ்சமின் நேதன்யாஹூ அவர்களுக்கு கேரளாவை சேர்ந்த இந்தியாவின் நீண்ட யூத வரலாற்றில் முக்கிய கலைப்பொருட்களாக கருதப்படும் நினைவு பொருட்களின் 2 ஜோடி மாதிரிகளை பரிசளித்தார்.

பல்வேறு செப்பு தகடுகளை கொண்ட இரண்டு ஜோடிகளாலான அவை, 9-10 நூற்றாண்டில் எழுதப்பட்டவை என நம்பப்படுகிறது.

முதல் ஜோடி செப்புத் தகடுகள் இந்தியாவில் கொச்சியில் உள்ள யூதர்களுக்கால் நேசிக்கப்படுபவையாகும். அவை, இந்து அரசர், சேரமான் பெருமாள் (பாஸ்கர ரவி வர்மா என பெரும்பாலும் குறிப்பிடப்படுவர், யூத தலைவரான ஜோசப் ரப்பான் என்பவருக்கு பாரம்பரிய அரசு சலுகைகள் மற்றும் தனியுரிமைகளை வழங்குவதை குறிக்கும் சாசனமாக கருதப்படுகிறது. பாரம்பரியமான யூதர்களின் கணக்கின்படி, ஜோசப் ரப்பான் பின்னர், கிரங்கனூருக்கு இணையான இடம் என கருதப்பட்ட இடமான ஷிங்லி இளவரசர் என முடிசூட்டப்பட்டார், கொச்சி மற்றும் மலபாரில் உள்ள பல்வேறு இடங்களுக்கு செல்வதற்கு முன்பு, யூதர்கள் பல நூற்றாண்டுகளாக சமய மற்றும் கலாச்சார தன்னாட்சி உரிமையை கிரங்கனூரில் அனுபவித்து வந்தனர். ஒரு சமயம், உள்ளூர் யூதர்கள், புனித இடம் மற்றும் “இரண்டாவது ஜெருசலேம்” என நினைவுக் கூர்ந்து ஷிங்லி/கிரங்கனூரின் ஒரு பிடி மண்ணை ஒவ்வொரு சவப்பெட்டியிலும் வைத்தனர். இந்த தட்டுகளின் மாதிரிகள், கொச்சி, மட்டன்சேரியில் உள்ள பரதேசி ஸைனகோகின் (திருக்கூட்டம்) ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்டது.

இரண்டாவது ஜோடி செப்புத் தட்டுகள், இந்தியாவுடனான யூத வணிகம் குறித்த முந்தைய ஆவணமாக நம்பப்படுகிறது. இந்த தட்டுகள், உள்ளூர் இந்து அரசர் உள்ளூர் தேவாலயத்திற்கு நிலம் மற்றும் வரிச் சலுகைகளை வழங்கியதையும் மற்றும் கொல்லம், மேற்கு ஆசியா மற்றும் இந்திய வணிக கூட்டுக்கள் குறித்து தெரிவிக்கிறது. இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், ஜோராஸ்டிரியன்கள் உள்ளிட்ட மேற்கு ஆசிய மன்றங்கள் மற்றும் யூத குழுவினர், ஜுடியோ-பாரசீக மற்றும் அரபிக் மற்றும் பஹ்லபி (மத்திய பாரசீக)-ல் கையொப்பமிட்டுள்ளனர். இந்த தட்டுகளில் அவர்களது கையொப்பது, மொழி பரிசயமற்ற உள்ளூர் தொழிலாளரால் பொறிக்கப்பட்டுள்ளதாக காணப்படுகிறது. இந்தத் தட்டுகளின் மாதிரி, கேரளா, திருவில்லாவில் உள்ள மலங்காரா மார் தோமா சிரியன் தேவலாயம் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்டது.

இது தவிர, பிரதமர், பிரதமர் திரு.நேதன்யாஹூவிற்கு, கேரளாவில் உள்ள யூத சமூகத்தினர் அளித்த டோரா சுருளையும் பரிசளித்தார். நூறாண்டுகளுக்கு முன்பாக கையெழுத்தால் எழுதப்பட்ட இச்சுருள், 1568-ம் ஆண்டு கட்டப்பட்ட கொச்சியில் உள்ள ஸைனகோகிற்கு (திருக்கூட்டம்) அர்ப்பணிக்கப்பட்டதாகும். மரப்பெட்டியில் மரத் துண்டுகளால் இணைக்கப்பட்டு, வெள்ளித் தகடு மற்றும் தங்கத் தகட்டிலான மலர் அலங்காரத்துடன் கூடிய உலோக கீரிடத்துடன் கூடிய டோரா, தென்னிந்தியாவின் விளக்குகள் மற்றும் அலங்கார பிரதிபலிப்புகளை கொண்டுள்ளது.