Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் திரு.மோடி, இஸ்ரேலிய பிரதமர் திரு.நேதன்யாஹூ, நாட்டிற்கு ஐக்ரியேட் மையத்தை அர்ப்பணித்தனர்

பிரதமர் திரு.மோடி, இஸ்ரேலிய பிரதமர் திரு.நேதன்யாஹூ, நாட்டிற்கு ஐக்ரியேட் மையத்தை அர்ப்பணித்தனர்

பிரதமர் திரு.மோடி, இஸ்ரேலிய பிரதமர் திரு.நேதன்யாஹூ, நாட்டிற்கு ஐக்ரியேட் மையத்தை அர்ப்பணித்தனர்

பிரதமர் திரு.மோடி, இஸ்ரேலிய பிரதமர் திரு.நேதன்யாஹூ, நாட்டிற்கு ஐக்ரியேட் மையத்தை அர்ப்பணித்தனர்


அகமதாபாத் புறநகரில் அமைந்துள்ள ஐக்ரியேட் வசதியை பிரதமர் திரு.மோடி மற்றும் இஸ்ரேலிய பிரதமர் திரு.நேதன்யாஹூ ஆகியோர் இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தனர். கண்டுபிடிப்பு, பொறியியல், பொருட்கள் வடிவமைப்பு போன்றவற்றின் மூலம் தொழில்முனைவதற்கான வசதியையும் மற்றும் உணவு பாதுகாப்பு, தண்ணீர், இணைப்பு, இணையபாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு, எரிசக்தி, உயிரி-மருத்துவ சாதனம் மற்றும் கருவிகள் போன்றவற்றில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை அதிகரிக்கச் செய்வதை நோக்கமாக கொண்டு சுயசார்பான மையமாக ஐக்ரியேட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தரமான தொழில்முனைவோர்களை உருவாக்குவதற்கான சுற்றுச்சூழலை உருவாக்குவதே ஐக்ரியேட்டின் இலக்காகும்.

பல்வேறு துறைகளில் அடைந்துள்ள தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் பல்வேறு அரங்குகளை இரு தலைவர்களும் பார்வையிட்டனர்.

கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், இந்தியா மற்றும் இஸ்ரேஸ் மக்கள் இடையே ஒருவருக்கொருவர் நெருக்கத்தை கொண்டு வருவதற்கு கண்டுபிடிப்பு முக்கிய பங்காற்றுகிறது என்றார். ஒட்டுமொத்த உலகமும் இஸ்ரேலின் தொழில்நுட்ப ஆற்றலையும், கண்டுபிடிப்பையும் அறிந்துள்ளது என்றார்.

இந்திய இளைஞர்கள் ஆற்றலும், உற்சாகமும் மிக்கவர்கள். சிறிதளவு ஊக்கமும், நிறுவன ஆதரவு மட்டுமே இளைஞர்களின் தேவையாக உள்ளது என்றார் அவர்.

ஒட்டுமொத்த அமைப்பையும் கண்டுபிடிப்பிற்கேற்ற சூழ்நிலையாக உருவாக்கிட அரசு உழைத்து வருகிறது என்றும், ஆகவே ஆர்வம் உத்திகளை உருவாக்கும்; உத்திகள் கண்டுபிடிப்புகளை அடையச் செய்யும்; மற்றும் கண்டுபிடிப்புகள் புதிய இந்தியாவை உருவாக்க உதவும் என்றார் பிரதமர்.

அவர், வெற்றிக்கு முதலாவது அடிப்படையான தேவை வீரமாகும் என்றார். ஐக்ரியேட்டில் கண்டுபிடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வீரமிக்க இளைஞர்களை அவர் பாராட்டினார்.

காளிதாசரை குறிப்பிட்ட பிரதமர், மரபு மற்றும் கண்டுபிடிப்பிற்கு இடையே உள்ள குழப்பம் குறித்தும் பேசினார். நாட்டை எதிர்கொண்டிருக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கும், குறைந்த செலவில் சாதாரண மனிதனின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் இந்திய இளைஞர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

உணவு, தண்ணீர், உடல்நலம் மற்றும் எரிசக்தி போன்ற துறைகளில் கண்டுபிடிப்பிற்காக இந்தியா மற்றும் இஸ்ரேல் உடனான கூட்டுறவு குறித்து பிரதமர் பேசினார். இரு நாடுகளுக்கிடையேயான இந்த கூட்டுறவு, 21ம் நூற்றாண்டின் மனிதகுல வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதும் என அவர் தெரிவித்தார்.