பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை அசாமிற்கு செல்கிறார்.
அங்கு தின்சுக்கியா மாவட்டத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தோலா-சாடியா பாலத்தை அவர் திறந்து வைக்கிறார்.
குவஹாத்தியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவும், கோகாமுக்கில் இந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தை அமைப்பது ஆகிய இரண்டு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். மாலையில் கானாபாராவில் பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகிறார்.
அசாமிற்கு தான் செல்ல உள்ளது பற்றியும் அங்கு பங்கேற்கும் நிகழ்ச்சிகள் பற்றியும் பிரதமர் தொடர்ச்சியான டுவிட்டர் பதிவுகள் மூலம் தெரிவித்திருந்தார். அசாம் மக்களை சந்திக்க மிகவும் ஆவலாக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டு இருந்தார்.
“நாளை நான் அசாம் செல்ல உள்ளேன். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். இந்த வாய்ப்பின் மூலம் அசாம் மக்களுடன் கலந்துரையாடுவதற்கு ஆவலாக உள்ளேன்.
எய்ம்ஸ் மற்றும் ஐ.ஏ.ஆர்.ஐ. ஆகிய இரண்டு முக்கிய திட்டங்களுக்கு நான் அடிக்கல் நாட்டுகிறேன். இந்த இரு திட்டங்களும் அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியை துரிதப்படுத்தும்.
தோலா சடியா பாலம் நாளை திறக்கப்படும். இந்த பால திட்டம் நம் நாட்டின் முக்கியமான கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றாகும்.
மாலையில் நான் கானாபாரா என்ற இடத்தில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறேன். நீங்கள் என் உரையை உங்கள் கைபேசியில் காணலாம். அதற்கான சுட்டி http://nm4.in/dnldapp ” என்று பிரதமர் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
***
I will be in Assam tomorrow to take part in various programmes. I am eagerly awaiting this opportunity to interact with people of Assam.
— Narendra Modi (@narendramodi) May 25, 2017
I shall lay the foundation stone for two key projects- AIIMS & IARI. Both projects will quicken the development of Assam & the Northeast.
— Narendra Modi (@narendramodi) May 25, 2017