Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் நாளை நாக்பூர் பயணம்


அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை நாக்பூருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள செய்திகள்: “அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நாளை நாக்பூருக்கு நான் பயணம் மேற்கொள்வது எனக்கு பெருமையாக உள்ளது.

டாக்டர் அம்பேத்கருக்கு நெருக்கமான தொடர்பு உள்ள நாக்பூரில் உள்ளன. தீக்ஷபூமியில் நான் நாளை பிரார்த்தனை செய்ய உள்ளேன்.

நாளை நாக்பூரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் துவக்கப்பட உள்ளது. இந்த திட்டங்கள் மக்களின் வாழ்வில் நல்ல தாக்கத்தை கொண்டு வரும்.

இதில் இந்திய தொலை தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம், இந்திய மேலாண்மை நிறுவனம் மற்றும் கோரடி அனல்மின் நிலையம் அடங்கும். பொது கூட்டத்திலும் நான் உரையாற்ற உள்ளேன்.

டிஜிதன் மேளாவின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அதிர்ஷடசாலி வாடிக்கையாளர் திட்டம் மற்றும் டிஜிதன் வணிகர்கள் திட்டத்திற்கான பெரிய அளவில் நடைபெற்ற குலுக்கல் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு நான் விருது வழங்க உள்ளேன்.

வலிமையான, செழிப்பான மற்றும் அனைத்தும் உள்ளடக்கிய டாக்டர். அம்பேத்கரின் கனவை நனவாக்கும் விடா முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்” என்று பிரதமர் கூறியுள்ளார்.