Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதம மந்திரியின் திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். 60 லட்சம் இளைஞர்கள் புதிதாக பயிற்சி பெறுவார்கள்


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ரூ. 12,000 கோடி மதிப்பீட்டிலான அடுத்த நான்கு ஆண்டுகளில் (2016-2020) ஒரு கோடி மக்களுக்கு திறன் பயிற்சி வழங்கும் பிரதம மந்திரி திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கு (பி.எம்.கே.வி.ஒய்) ஒப்புதல் அளித்துள்ளது. பி.எம்.கே.வி.ஒய் – ல் புதிதாக 60 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். முன்பே கற்றறிந்தவற்றை அங்கீகரிக்கும் வகையில் முறைசாராத பயிற்சித் திறன் பெற்ற 40 லட்சம் பேருக்கு திறன் சான்றிதழ் வழங்கப்படும். புதிய பயிற்சி மற்றும் முந்தைய கற்றலை அங்கீகரிக்கும் பயிற்சி ஆகியவற்றின் இலக்கு ஒதுக்கீடுகள் மாற்றி அமைக்கக் கூடிய வகையில் அமையும். செயல்பாடு மற்றும் செயல் தேவைகள் அடிப்படையில் இவை அமையும்.

இந்தத் திட்டம், ஏற்கனவே அறிவிக்கை செய்யப்பட்ட பொது நெறிகளுடன் முற்றிலுமாக ஒருங்கிணைக்கப்பட்டு எதிர்காலத்தில் மானிய அடிப்படை மாதிரியாக அமையும். அதாவது பொது நெறிகளுக்கு இணங்க பயிற்சி மற்றும் மதிப்பீட்டுச் செலவினம் பயிற்சி வழங்கியவர்களுக்கும், மதிப்பீடு செய்தவர்களுக்கும் நேரடியாக வழங்கப்படும்.
பயிற்சியாளர்களுக்கு பயணப்படி தங்கிடம் மற்றும் உணவுச் செலவுகள் ஆகியவற்றுக்கு நிதி உதவி வழங்கப்படும். வேலைவாய்ப்பு கிடைத்த பிறகு வழங்கப்படும் உதவித் தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கு மாற்றித் தரப்படும். பயிற்சி வழங்கியதில் பங்கேற்றவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் விநியோகிப்பது ஆதார் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களுடன் இணைக்கப்படும். இதனால் சிறப்பான வெளிப்படைத் தன்மையும் இலக்கு நிர்ணயமும் தேசியத் திறன் தகுதி அடிப்படையில் தொழில்துறையினர் நிர்ணயித்த தரங்களின் படி திறன் பயிற்சி வழங்கப்படும்.
பல்வேறு மாநிலங்களின் தனிப்பட்ட திறன் தேவைகளைச் சந்திப்பது குறித்த திறன் மேம்பாட்டு முதலமைச்சர்கள் துணைக்குழு பரிந்துரையின் படி மாநில அரசுகள் திட்ட அடிப்படை அணுகுமுறையில் ஈடுபடுத்தப்படுவார்கள். இத்திட்டத்தின் படி நிதி மற்றும் எண்ணிக்கை சார்ந்த இலக்குகள் ஒதுக்கீடு 2016 – 20 ம் ஆண்டு 25 சதவீத அளவுக்கு மேற்கொள்ளப்படும். பி.எம்.கே.வி.ஒய் திட்டத்தின் அடுத்த கட்ட மொத்தப்பயிற்சி இலக்குகளில் 25 சதவீதம் அடைவதற்கு நிதித் தொகை / பட்ஜெட் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு நேரடியாக ஒதுக்கப்படும்.

பயிற்சியாளர்களின் ஆட் சேர்க்கை, கண்காணிப்பு, பயிற்சி முடிந்தவுடன் வேலைவாய்ப்பு ஆகியன வேலைவாய்ப்பு முகாம்கள் ம ற்றும் ஆட்சேர்ப்பு முகாம்கள் மூலம் மேற்கொள்ளப்டும். பொது நெறிமுறைகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள ஊக்குவிப்புகள் சார்ந்த வேலைவாய்ப்புக்கு முக்கியக் கவனம் செலுத்தப்படும். முறைசாரா பயிற்சி பெற்றவர்களுக்கு பாரம்பரிய வேலை வாய்ப்பு அளிக்கும் நடவடிக்கையும் திட்ட அடிப்படை அணுகுமுறையில் மேற்கொள்ளப்படும். பி.எம்.கே.வி.ஒய் உள்ளூர்த திறன் தேவைகளை நிறைவு செய்வதுடன் வளைகுடா நாடுகள், ஐரோப்பா, இதர வெளிநாடுகளுக்கான சர்வதேச தரத்துடனும் இந்தப் பயிற்சி இணைக்கப்படும். இத்திட்டத்தில் உயர் வேலை வாய்ப்புக்கான பயிற்சி அளிக்க கல்வி உதவித் தொகைகளும் வழங்கப்படும்.