Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரபல பாடகர் ஜுபீன் கார்க்கின் திடீர் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்


பிரபல பாடகர் ஜுபீன் கார்க்கின் திடீர் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி  இன்று ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இசைத்துறையில் அவரது சீரிய பங்களிப்பிற்காக அவர் என்றும் நினைவு கூரப்படுவார் என்று திரு மோடி குறிப்பிட்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர்  குறிப்பிட்டிருப்பதாவது:

“பிரபல பாடகர் ஜுபீன் கார்க்கின் திடீர் மறைவை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இசைத்துறையில் அவரது சீரிய பங்களிப்பிற்காக அவர் என்றும் நினைவு கூரப்படுவார். அவரது படைப்புகள் அனைத்து தரப்பு மக்களிடமும் பிரபலமடைந்துள்ளன. அன்னாரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி.”

***

AD/RB/RJ