பி.எம்.இந்தியா
பிரபல பின்னணிப் பாடகி சுமன் கல்யாண்பூரின் மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தனது ஆழ்ந்த துயரத்தையும் இரங்கலை தெரிவித்துள்ளார்.
சுமன் கல்யாண்பூரின் அவர்களின் மறைவு தமக்கு மிகுந்த வேதனை அளிப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அவரது இனிமையான குரலும், ஆன்மாவைத் தொடும் பாடல்களும் இந்தியாவின் கலாச்சார உலகை வளப்படுத்தியது என்றும், தனது பாடல்கள் மூலம் இசைப்பிரியர்கள் மற்றும் இந்தியத் திரைப்பட ரசிகர்களின் இதயங்களில் அவர் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்திருந்தார் என்றும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“பிரபல பின்னணிப் பாடகி சுமன் கல்யாண்பூரின் அவர்களின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது இனிமையான குரலும், ஆன்மாவைத் தொடும் பாடல்களும் நமது கலாச்சார உலகை வளப்படுத்தின. தனது பாடல்களின் மூலம், இசைப்பிரியர்கள், இந்தியத் திரைப்பட ரசிகர்களின் நெஞ்சங்களில் அவர் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்திருந்தார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி.”
***
(Release ID: 2267416)
SS/EA/KR
Anguished by the passing of the popular singer Suman Kalyanpur Ji. Her melodious voice and soulful renditions enriched our cultural world. Through her songs, she created a special place among music lovers and admirers of Indian cinema. Condolences to her family and admirers. Om… pic.twitter.com/xCGswIq0s6
— Narendra Modi (@narendramodi) June 1, 2026