பி.எம்.இந்தியா
பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் திரு. நிகோலஸ் சர்கோசி, பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
திரு. சர்கோசியின் சமீபத்திய புத்தகமான லா பிரான்ஸ் புர் லா வி-யை வெற்றிகரமான முறையில் வெளியிட்டதற்கு பிரதமர் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பாரீஸ், பதான்கோட், பிரசல்ஸ் மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் சமீபத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை பிரதமரும், திரு. சர்கோசியும் கண்டித்ததுடன், பயங்கரவாத எதிர்ப்புக்கு எதிராக உலகளாவிய சமுதாயம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
பாரிசில் கடந்த ஆண்டு நடைபெற்ற சி.ஓ.பி.-21 உச்சி மாநாட்டின் வெற்றிக்கு இந்தியா அளித்த நேர்மறையான பங்களிப்புக்காக பிரதமர் திரு. மோடிக்கு திரு. சர்கோசி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
Met the former President of France, Mr. @NicolasSarkozy. pic.twitter.com/FvQ4zk2c9M
— Narendra Modi (@narendramodi) April 13, 2016