பி.எம்.இந்தியா
மேதகு அதிபர் ஜி ஜின்பிங் அவர்களே,
மேதகு அதிபர் ஜேக்கப் ஜுமா அவர்களே,
மேதகு அதிபர் மிச்செல் டெமெர் அவர்களே,
மேதகு அதிபர் விளாடிமிர் புதின் அவர்களே,
பிரிக்ஸ் செயல்பாட்டுக் கவுன்சிலின் மதிப்புமிக்க உறுப்பினர்களே.
பிரிக்ஸ் செயல்பாட்டுக் கவுன்சிலின் இந்தக் கூட்டத்திற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நமது நாடுகளுக்கு இடையே முழுமையான பொருளாதார பன்முகத்தன்மை மற்றும் வணிக பங்கேற்பை இந்தக் கவுன்சில் முழுமையாக பிரதிபலிக்கிறது.
பொறுப்புமிக்க மற்றும் கூட்டு தீர்வுகள் மூலம் பங்கேற்புடன் கூடிய பொருளாதாரத்தை உருவாக்குவது என்ற பிரிக்ஸ் செயல்திட்டத்தில் அவர்கள் அளித்த பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
மாண்புமிகு தலைவர்களே, நண்பர்களே,
பிரிக்ஸ் உருவாக்கப்பட்டதில் பொருளாதார மற்றும் வணிக ரீதியில் பங்கேற்பை மேம்படுத்திக் கொள்வது என்பது, ஒரு அடிப்படையான உந்துதலாக இருந்தது. பிரிக்ஸ் செயல்பாட்டுக் கவுன்சில் டர்பனில் அமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளில் ஆரோக்கியமான வடிவம் பெற்றிருப்பதைக் காண்பது ஊக்கம் தருவதாக உள்ளது.
பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையில் நெருக்கமான மற்றும் வேகமான வணிக ஒத்துழைப்பை வலுவாக முன்னெடுத்துச் செல்பவர்களாக நமது தொழில் சமூகத்தினர் உள்ளனர்.
அவர்களுடைய பங்களிப்புகள் நமது சமூகங்களில் சொத்துகளையும் மதிப்பையும் உருவாக்குகின்றன. தொழில்நுட்பத்தில் புதுமை மற்றும் திறன் சேர்ப்பு மூலமாக நமது பொருளாதாரங்களில் உற்பத்தியைப் பெருக்கி வேலைகளை அவர்கள் உருவாக்குகின்றனர்.
அந்த தொலைநோக்கு பார்வையை நான் பாராட்டுகிறேன். அதில் பங்கெடுத்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு தலைவர்களே,
இந்தியாவில், நாங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தி, எளிமைப்படுத்தி இருக்கிறோம். குறிப்பாக இந்தியாவில் தொழில் செய்வதை எளிமைப்படுத்தி இருக்கிறோம்.
அதன் முடிவுகள் தெளிவாகத் தெரிகின்றன.
இவ்வாறான செயல்பாடுகளை மதிப்பிடக் கூடிய உலகளாவிய மதிப்பீடுகளில் ஏறத்தாழ அனைத்து மதிப்பீடுகளிலும் நாங்கள் முன்னேறி இருக்கிறோம்.
உலகில் மிகவும் தாராளமான பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியாவை நாங்கள் மாற்றியிருக்கிறோம்.
வளர்ச்சி வலுவானதாக இருக்கிறது. இதே வேகத்தில் செல்வதற்கு நாங்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
தொழில் செய்வதில் எளிதான போக்கு, வர்த்தகத் தடைகளை நீக்குதல், தொழில்திறன் மேம்பாட்டை ஊக்குவித்தல், உற்பத்தி வழங்கல் மற்றும் கட்டமைப்பு வளர்ச்சியில் சங்கிலித் தொடர்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில், பிரிக்ஸ் செயல்பாட்டு கவுன்சில், பொருந்தக்கூடிய முன்னுரிமைகளைக் கொண்டு செயல்படுவதை அறிவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் வியாபார விரிவாக்கத்துக்கு ஊக்கம் தரும் வகையில் கவுன்சிலின் பணிகள் உள்ளன.
மாண்புமிகு தலைவர்களே,
புதிய வளர்ச்சி வங்கி இப்போது முழுமையாக செயல்படுகிறது. நமது பொதுவான முயற்சிகளால் அதன் உறுதியான வெற்றி அமைந்துள்ளது.
முதலாவது தொகுப்பு திட்டங்களை தொடங்கியதற்காக NDB மற்றும் அதன் நிர்வாகத்தை நாம் பாராட்டுகிறோம்.
சுற்றுச்சூழலை பாதிக்காத எரிசக்தி, பசுமை மற்றும் நீடித்த கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை தனது முன்னுரிமைகளாக NDB அமைத்துக் கொண்டுள்ளது.
அதை நாங்கள் வரவேற்கிறோம்.
வளமான பொருளாதார திட்டங்களை அடையாளம் கண்டு அவற்றை செயல்படுத்துவதில் NDB உடன் பிரிக்ஸ் செயல்பாட்டுக் குழு நெருக்கமாகப் பணியாற்றுவதை நாம் ஊக்குவிக்கிறோம்.
பிரிக்ஸ் தொழில் கண்காட்சியை புதுடெல்லியில் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியா நடத்தியது. நமது அனைத்து நாடுகளும் இதில் ஆக்கபூர்வமாக பங்கேற்றன.
அதிக வியாபார விழிப்புணர்வு மற்றும் வணிக பரிமாற்றங்களை உருவாக்குவதற்கு இதுபோன்ற செயல்பாடுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
மாண்புமிகு தலைவர்களே,
கீழ்க்காணும் நமது பொதுவான லட்சியங்களை அடைவதற்கு, பிரிக்ஸ் செயல்பாட்டுக் கவுன்சில் மீது, அரசுகளாக நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம் என்பதைக் கூறி நான் நிறைவு செய்கிறேன் :
• பரஸ்பர வர்த்தகத்தை வலுப்படுத்துதல்
• வியாபார வாய்ப்புகளை மேம்படுத்துதல்
• முதலீட்டு தொடர்புகளை உருவாக்குதல்
• புதுமைகளை ஊக்குவித்தல்; மற்றும்
• பிரிக்ஸ் வணிகத்துக்குள் உள்ள தடைகளை நீக்குதல்.
இன்னும் சிறிது நேரத்தில் நாம் பிரிக்ஸ் செயல்பாட்டுக் கவுன்சில் மற்றும் NDB தகவல்களை கேட்கவிருக்கிறோம்.
நன்றி. மிக்க நன்றி.
Spoke on the rich potential of economic cooperation between BRICS nations at the @BRICS2016 Business Council Meet. https://t.co/3hSDJRDR3p
— Narendra Modi (@narendramodi) October 16, 2016
Highlighted reforms undertaken by India in last 2 years to make business easier & make India one of the most open economies in the world.
— Narendra Modi (@narendramodi) October 16, 2016
BRICS Business Council has a key role in strengthening trade & business opportunities, building investment linkages & promoting innovation.
— Narendra Modi (@narendramodi) October 16, 2016