பி.எம்.இந்தியா
மேதகு தலைவர்களே,
பிரிக்ஸ் அமைப்பின் பொருளாதார முன்முயற்சிகள் குறித்து நாம் பெருமை கொள்ளலாம். இந்த முயற்சிகள் பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, வளரும் உலக நாடுகளுக்கும் அது உதவி செய்யும்.
பிரிக்ஸ் நாடுகளாகிய நாம், ஜி20 நாடுகளின் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
இந்த வளர்ச்சியில் ஜி20 அமைப்பு நாடுகள் கீழ்கண்டவற்றுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். முதலாவதாக,
• 2030க்கான நிலையான வளர்ச்சித் திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்துவதோடு, உரிய நிதி ஆதாரத்துக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இரண்டாவதாக, உலக நிதி முதலீட்டில் ஜி20 நாடுகள் கீழ்கண்டவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
• உலக நிதி அமைப்புகளை மறுசீரமைக்கும் முடிவை அமல்படுத்த வேண்டும்.
• பிராந்திய நிதி அமைப்புகள் மற்றும் இதர நிதி அமைப்புகளிடையே கூட்டுறவை ஏற்படுத்த வேண்டும்.
• வளரும் நாடுகளின் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு நீண்டகால நிதி முதலீட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
• அடுத்த தலைமுறைக்கான அனைத்து தட்பவெட்பங்களையும் தாங்கும் உட்கட்டமைப்பு வசதிகள். கழிவுகளை உட்கட்டமைப்பில் பயன்படுத்துவதும் இதில் அடங்கும்.
• பணப்பரிமாற்றத்துக்கான செலவை 2030க்குள் குறைப்பது.
• ஊழலை தடுப்பது மற்றும் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் சேர்த்த சொத்துக்களை முடக்குவது மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அவற்றை திரும்ப அளிப்பது.
மூன்றாவதாக வர்த்தகத் துறையில் நாம் கீழ்கண்டவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
• விதிகளின் அடிப்படையிலான உலக வர்த்தக முறையை உறுதிப்படுத்துவதோடு, இதற்கான புதிய தடைகள் உலக வர்த்தக முறையில் பிளவு ஏற்படுத்தாமல் தடுப்பது.
• டோகா வளர்ச்சித் திட்டத்தை விரைவுப் படுத்துவது.
• திறனுள்ள பணியாளர்களை வளர்த்தெடுத்து, அவர்கள் உலகெங்கும் பயனாற்ற வழிவகை செய்வது மற்றும் இதற்கான சந்தையை உருவாக்குவது.
நான்காவதாக தட்பவெட்ப மாற்றத்தில் ஜி20யின் நோக்கமாக கீழ்கண்டவை இருக்க வேண்டும்.
• ஐக்கிய நாடுகள் அவையின் தட்பவெட்பத்துக்கான மாநாட்டில் தட்பவெட்பம் குறித்து வகுத்துள்ள கொள்கை முடிவுகளை, பல்வேறு பொறுப்புகளோடு COP21ல் நிறைவேற்றுவது.
• தட்பவெட்பத்துக்கான நிதி உதவியும், தொழில்நுட்ப மாற்றத்தையும், வளரும் நாடுகளுக்கு செய்வது.
• சுத்தமான எரிசக்தியை எளிதாக அடையும் வகையில் இதற்கான ஆராய்ச்சியை அதிகப்படுத்துவது.
• அடுத்த தலைமுறைக்கான அனைத்து தட்பவெட்பங்களையும் தாங்கக்கூடிய உட்கட்டமைப்பை மேம்படுத்துதல்.
• இந்தியா முன்னெடுக்கக் கூடிய சூரியஒளிக் கூட்டணிக்கு ஆதரவு தருதல்.
ஐந்தாவதாக ஜி20 நாடுகள் பாதுகாப்பு தொடர்பான அனைத்து சவால்களையும் சமாளிக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை தவிர்த்து கீழ்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
• தீவிரவாதிகளுக்கான நிதி, இதர உதவிகள், தகவல் தொடர்புகள் உள்ளிட்ட அனைத்தையும் முடக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
• தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களும் வெடிபொருட்களும் கிடைப்பதை தடுக்க வேண்டும்.
• தீவிரவாத நடவடிக்கைகளை சிதைக்க உலகளாவிய அளவில் ஒரு சட்டரீதியான அமைப்பை ஏற்படுத்துதல்.
• தீவிரவாதிகள் இணையத்தை பயன்படுத்துவதை தடுக்க முழுமையான ஒத்துழைப்பு.
• சர்வதேச தீவிரவாதத்துக்கு எதிரான ஒரு அமைப்பை விரைவாக ஏற்படுத்துதல்.
பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதாரம் தொடர்ந்து நிலையாகவும், உறுதியாகவும் இருந்து உலக பொருளாதாரத்துக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.
மேதகு தலைவர்களே,
பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்புக்காக நாம் யூஃபாவில் வகுத்திருந்த திட்ட ஆவணம் ஒரு முக்கியமான ஆவணமாகும்.
வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்துக்காக அமைக்கப்பட்ட தொடர்புக் குழு இத்திட்டத்தை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் செயல்படுத்தவதற்காக ஒரு செயல்திட்டத்தை வகுக்க வேண்டும்.
அந்த திட்ட ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள இரண்டு விஷயங்களையாவது பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் முன்னெடுக்க வேண்டும்.
பிரிக்ஸ் அமைப்புக்கு ரஷ்யா தலைமையேற்று இருக்கையிலேயே இதன் முதல் கூட்டுக் கூட்டம் நடைபெறுவது பொருத்தமாக இருக்கும்.
2020ம் ஆண்டு வரை, வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் முதலீட்டுக்கான ஒத்துழைப்பு குறித்து அந்த கூட்டுக் கூட்டம் ஆய்வு செய்வது சிறப்பாக இருக்கும்.
மேதகு தலைவர்களே,
புதிய வளர்ச்சி வங்கி தன் செயல்பாடுகளை விரைவில் தொடங்கும் என்று நம்புகிறேன். ஏற்கனவே நான் யூஃபாவில் சொன்னபடி, அதன் முதல் திட்டம் பிரிக்ஸ் நாடுகளுக்கான சுத்தமான எரிசக்திக்காக இருக்க வேண்டும்.
புதிய வளர்ச்சி வங்கி அமைப்பு போல இதற்கான ஒரு ஆதரவு அமைப்பை உருவாக்க வேண்டும். அந்த அமைப்பு, புதிய யோசனைகள், அனுபவங்களின் சேகரிப்புகள் மற்றும், அறிவுசார் அமைப்பாக செயல்பட வேண்டும். அது அவசரகால ஏற்பாடுகளுக்கான ஆலோசனைகளையும் கூற வேண்டும்.
மேதகு தலைவர்களே,
இந்தியா பிரிக்ஸ் நாடுகளோடு, பரஸ்பர நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் தொடர்ந்து செயல்படும்.
நான் யூஃபாவில் சில யோசனைகளை பகிர்ந்து கொண்டேன். அது வர்த்தக கண்காட்சிகள், விவசாய ஆராய்ச்சி, ரயில்வே ஆராய்ச்சி, நாடுகளுக்கிடையே, நகரங்களுக்கிடையே மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கிடையேயான ஒத்துழைப்பு, மற்றும் விளையாட்டு மற்றும் திரைப்படங்களை பகிர்தல் ஆகியவையாகும்.
இவற்றை தொடர்ந்து வளர்த்தெடுப்பதோடு, பிரிக்ஸ் திட்டத்தில் பல்வேறு புதிய யோசனைகளையும் கூறுவோம்.
பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்தவதற்காக தொடர்ந்து பாடுபடுவோம்.
பிரிக்ஸ் அமைப்பின் 8வது மாநாட்டில் இந்தியாவில் உங்களை சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.
நன்றி.
On the sidelines of @G20Turkey2015, met BRICS leaders. Spoke about the importance India attached to BRICS & scope of economic cooperation.
— Narendra Modi (@narendramodi) November 15, 2015
We are united in condemning the dreadful acts of terror in any part of the world. Need of the hour is to combat all forms of terror.
— Narendra Modi (@narendramodi) November 15, 2015
Theme of India's BRICS Chairmanship starting Feb 2016, will be Building Responsive, Inclusive & Collective Solutions https://t.co/jikUnt1btY
— Narendra Modi (@narendramodi) November 15, 2015
With the G20 leaders. @G20Turkey2015 pic.twitter.com/i87rpxhWke
— Narendra Modi (@narendramodi) November 15, 2015