Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

‘பிரிட்ஜிடல் நேஷன்’ புத்தக வெளியீட்டு விழாவில் பிரதமரின் உரை


நாட்டில் உள்ள சமூக மற்றும் தொழில் துறையினரிடையே எப்போதும் உற்சாகத்தையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தக்கூடிய ரத்தன் டாடா அவர்களே, அவரது பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் என் சந்திரசேகரன் அவர்களே, ரூபா அவர்களே மற்றும் தாய்மார்களே, சகோதரர்களே!!

ரத்தன் டாடாவையும், சந்திரசேகரனையும் சந்திப்பதும், அவர்களுடன் பேசுவதும், எப்போதும் ஒரு புதிய அனுபவத்தை தருகிறது. நாட்டில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றுக்கு அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளனர்.

இதுபோன்ற பெரிய பொறுப்புகளை ஏற்றிருந்தாலும், அவர்களால் எப்படி புன்னகையுடன், மனஅழுத்தமின்றி இருக்க முடிகிறது என்பது வியப்பாக உள்ளது. இதுபற்றி சந்திரசேகரன் வருங்காலத்தில் ஒரு புத்தகத்தை எழுதுவார் என்று கருதுகிறேன். இதற்கு நான் எவ்வித காப்புரிமையும் கோர மாட்டேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதை நீங்கள் எவ்வித அழுத்தமும் இன்றி செயல்படுத்த வேண்டும்!!!

நண்பர்களே,

அவர் புத்தகத்தை எழுதுவாரா இல்லையா என்பதை நான் தெளிவாக கூற இயலாது, ஆனால் புன்னகை மற்றும் மனஅழுத்தமற்ற மனநிலை காரணமாக, ‘பிரிட்ஜிடல் நேஷன்’ நம் முன்பாக கிடைத்திருக்கிறது.

எதையும் சாதகமான முறையில் சிந்தித்தல், கற்பனைத் திறன் மற்றும் ஆக்கப்பூர்வமான மனநிலை இருந்தால், நாடு எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கான புதிய சிந்தனைகள் தோன்றும்.

நமது திறமையில் உள்ள சாதகமான மனநிலையும், நம்பிக்கை மற்றும் வளம் ஆகியவை புதிய இந்தியாவின் சிந்தனைகளாகும்.

இந்த நூல், விருப்ப இந்தியாவை ஈர்ப்பதாக மட்டுமின்றி, சமுதாயத்தின் தொழில்நுட்ப நம்பிக்கையை ஊக்குவிப்பதாகவும் அமைவதோடு, புதிய அணுகுமுறை மற்றும் புதிய கண்ணோட்டத்தைப் பின்பற்றவும் வழிவகுக்கும். தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய இந்த நூலை எழுதியதற்காக சந்திரசேகரனையும், ரூபாவையும் நான் பெரிதும் பாராட்டுகிறேன்.

நண்பர்களே,

தொழில்நுட்பத்திற்காக கடுமையாக உழைத்து வரும் வேளையில் இந்த நூல் வெளியாகியுள்ளது. இது அச்சமற்ற சூழலை உருவாக்கும் ஒரு முயற்சியாகும்.

குறிப்பாக, இந்தியாவைப் பொறுத்தவரை தொழில்நுட்பம் என்பது நமது புவியியல் அமைப்பில் ஒரு சவாலாக உள்ளது.

இந்த நூலில் அரசின் தொலைநோக்கு சிந்தனை மேலும் வலுப்படுத்தப்பட்டிருப்பதோடு, தொழில்நுட்பம் என்பது இடையூறுகளை விளைவிப்பதற்கு பதிலாக ஒரு இணைப்பு ஊடகமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் ஒரு இணைப்புப் பாலமே அன்றி, அதுவொரு பிரிவினை அம்சமல்ல.

தொழில்நுட்பமும், திறமையும், ஆற்றலை பன்மடங்கு பெருக்குமே தவிர, அச்சுறுத்தலாக இருக்காது.

தொழில்நுட்பம், விருப்பங்களுக்கும் சாதனைகளுக்கும் இடையிலான ஒரு இணைப்புப் பாலமாக திகழும்.

தேவை மற்றும் செயல்பாட்டிற்கு இடையே இணைப்புப் பாலமாகவும் தொழில்நுட்பம் திகழும்.

அரசுக்கும் – ஆளுகைக்கும் இடையேயான இணைப்புப் பாலமாகவும் தொழில்நுட்பம் அமையும்.

தொழில்நுட்பம் என்பது ஒவ்வொருவரையும் வளர்ச்சியுடன் இணைக்கும் இணைப்புப் பாலமாகவும் திகழும் என்று பிரதமர் தெரிவித்தார்.