பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், புதிதாக 6 ஐ.ஐ.டி.க்களை திருப்பதி (ஆந்திரா), பாலக்காடு (கேரளா), தார்வார் (கர்நாடகா), பிலாய் (சத்திஸ்கர்), கோவா, ஜம்மு (ஜம்மு காஷ்மீர்) ஆகியவற்றில் திறக்கவும், தன்பாத்தில் உள்ள ஐ.எஸ்.எம். கல்வி நிறுவனத்தை ஐ.ஐ.டி.யாக தொழில்நுட்ப கல்வி நிலையங்கள் சட்டம் 1961ன் கீழ் மாற்றவும் தொழில்நுட்ப கல்வி நிலையங்கள் சட்டம் 1961 மசோதாவுக்கு முன் அனுமதி வழங்கப்பட்டது.
இந்த ஒப்புதலின் மூலம் புதிதாக 6 இந்திய தொழில்நுட்ப கல்வி நிலையங்கள், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் சட்டம் 1961ன் கீழ் கொண்டு வரப்படும். இவை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாக அறிவிக்கப்படும். மேலும், இந்த சட்ட மசோதாவானது, தன்பாத்தில் உள்ள ஐ.எஸ்.எம். கல்வி நிலையத்தை, ஐ.ஐ.டி.யாக, தொழில்நுட்ப கல்வி நிலையங்கள் சட்டம் 1961ன் கீழ் மாற்ற மாற்ற வகை செய்கிறது. மேலும், இதை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிலையமாக அறிவிக்கப்படும்.