பி.எம்.இந்தியா
அனைவருக்கும் நன்றி.
இன்று வருகை தந்திருக்கும் இளம் தொழில் அதிபர்களுக்கு கரவொலியின் மூலம் வரவேற்பு அளிப்போம். ஒரு ஞாயிற்றுக் கிழமையில் கூட பெரும் எண்ணிக்கையில் வந்துள்ள உங்களை வரவேற்கிறேன். ரீட் ஹாஃப்மேன் அவர்களே, உங்களது லிங்க்ட் இன் ஒரு சிறந்த தயாரிப்பாகும். இங்கேயும், இந்தியாவிலும் நீங்கள் பலருக்கு உத்வேகமாக இருக்கிறீர்கள். திரு.மோகன், திரு வெங்கி மற்றும் தூதர் ஆகியோருக்கு நன்றி. இந்த நிகழ்வில் கலந்து கொள்வது எனக்கு பெருமகிழ்ச்சி அடைகிறது. இந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் சிறப்பான நிகழ்ச்சி. ஏனென்றால், இந்த புதிய தொழில்கள் என் மனதுக்கு நெருக்கமானவை. ஏன் என்று உங்களுக்கு வியப்பாக இருக்கும். ஏனென்றால், அரசும் அரசு முதலீடுகளும் தொழில்களை வேகப்படுத்துவதற்கு பதிலாக தாமதப்படுத்தும். வாஷிங்டன் முதல் சிலிக்கான் பள்ளதாக்கு வரை, இதுதான் அணுகுமுறையாக இருந்தது. டெல்லியிலும், பெங்களூரிலும் தொழில்நுட்ப வல்லுனர்கள், இப்படித்தான் நினைத்தார்கள். இது வரை தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகள் எவையென்றால் நீங்கள் செயலிகளை கண்டுபிடிக்காமல் இருக்கும் பிரச்சினைகள் மட்டுமே. கடந்த ஆண்டு நான் தில்லிக்கு இடம் பெயர்ந்தபோது, என் அரசையும் புதிய தொழிலாகத்தான் கருதினேன்.
அதனால் நீங்கள் சந்திக்கும் சில பிரச்சினைகளை நானும் சந்தித்தேன். உங்கள் முன் உள்ள சவால்கள் எனக்குப் புரிகின்றன. ஆனால் புதியவற்றை கண்டுபிடிப்பது அலாதி இன்பத்தைத் தரும்.
மனித இனத்தின் வரலாறு மற்றும் முன்னேற்றம், கற்பனை, உத்வேகம், கண்டுபிடிப்பு மற்றும் புதிய சிந்தனைகளால் உருவாக்கப்பட்டது. பயங்கரமாக காற்று அடிக்கையில் சிலர் ஜன்னலை அடைப்பார்கள். ஆனால் சிலர், அந்த இடத்தில் ஒரு காற்றாலையை அமைப்பார்கள் என்று பல முறை கூறி வந்துள்ளேன். ஒரு சிக்கலை ஆக்கபூர்வமாக அணுகுவதற்கும், மனத்தளர்ச்சியோடு அணுகுவதற்கும் வேறுபாடு உள்ளது. சிக்கல்களை புதிய வாய்ப்பாகவோ அல்லது சவாலாகவோ கருதலாம். இந்த உலகம் எவ்வளவு பழமையானதோ, அவ்வளவு பழமையானது புதிய கண்டுபிடிப்புகள். ஒவ்வொரு புதிய பொருளாதார காலகட்டமும் இது போன்ற புதிய கண்டுபிடிப்புகளாலேயே கடந்த காலத்திலிருந்து வேறுபடுகிறது. புதிய கண்டுபிடிப்புகளும் தொழில்களும், மாற்றத்திற்கான வாகனமாக இருந்து வருகிறது. இன்று மிகப்பெரிய நிறுவனங்களாக வளர்ந்திருக்கும் நிறுவனங்கள் எல்லாம் ஒரு காலத்தில் புதிய தொழில்களே. தற்போது என்ன வேறுபாடு என்றால், இந்த டிஜிட்டல் யுகம், புதிய தொழில்களுக்கான ஒரு களத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. இந்த உலகில் நீங்கள் வளங்களை அனுபவிப்பதால் அல்ல. மாறாக ஒரு புதிய யோசனையை தெரிவிப்பதால். கண்டுபிடிப்பில் ஈடுபடுபவர்களை விட, அதை பயன்படுத்துபவர்களே புதிய கண்டுபிடிப்புகளை தீர்மானிக்கிறார்கள்.
இன்று இயற்கையான வளர்ச்சி விகிதத்தை மீறி வளர்கின்றன புதிய தொழில்கள். ஓர் புதிய யோசனை ஓராண்டுக்குள் உலகளாவிய அளவில் புகழ்பெற்றதாகி விடுகிறது. இந்த கண்டுபிடிப்புகளால் நுகர்வோர் மில்லியன் கணக்கிலும், பணியாளர்கள் ஆயிரக்கணக்கிலும், மதிப்பீடு பில்லியன் கணக்கிலும் வளர்கிறது. தொழில்நுட்பம், பல்வேறு துறைகளின் ஒருங்கிணைவு, மற்றும் புதிய யோசனைக்களுக்கான மக்கள் ஆதரவு ஆகியவை ஒரு புதிய உலகை திறந்துள்ளது. இந்த புதிய திட்டம் சிலிக்கான் பள்ளதாக்கில் உருவானது. நமது உலகை, கலிபோர்னியா மாற்றியது போல வேறு எந்த சமூகமும் மாற்றவில்லை. பெருநிறுவனங்கள் மட்டுமல்ல. மனிதகுலத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்ட புதிய நிறுவனங்கள் தங்கள் புதிய யோசனை காரணமாக இவ்வுலகை மாற்றி அமைத்து வருகின்றன. இதுதான் அமெரிக்காவின் வெற்றிக்கான காரணமாக அமைந்து உலகிற்கே உத்வேகமாக விளங்குகிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும், இந்தியாவையே மாற்றவும், இந்த புதிய கண்டுபிடிப்புகள் பெருமளவில் உதவி செய்கின்றன. இந்தியா 35 வயதுக்கு குறைந்த 800 மில்லியன் இளைஞர்களை கொண்ட நாடு. அவர்கள் மாற்றத்துக்கு ஆர்வமாக உள்ளனர். அந்த மாற்றத்துக்கான திறமையும் உத்வேகமும் அவர்களிடம் இருக்கிறது. இந்தியாவின் 500 நகரங்கள் பத்து புதிய நிறுவனங்களை தொடங்கினால், இந்தியாவின் 600 ஆயிரம் கிராமங்கள் ஆறு புதிய கண்டுபிடிப்புகளை தொடங்கினால், அது பொருளாதாரத்தை முன்னேற்றுவதோடு, மிகப்பெரிய வேலை வாய்ப்பையும் உருவாக்கும். இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு உலகம் வேகமாக மாறி வருகிறது. அது இளைஞர்களின் தன்னெழுச்சி, உற்சாகம் மற்றும் சக்தியால் உந்தப்பட்டு வருகிறது.
எங்களிடம் மிகப்பெரிய சந்தை உள்ளது. இதுவரை ஆராயப்படாத பல வாய்ப்புகள் உள்ளன. எங்களிடம் புதிய நிறுவனங்களுக்கான அமைப்புகளும், ஊக்கமும், ஆர்வமும் உள்ளன. நாங்கள் புதிய யோசனைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அனைத்து வசதிகளையும் பெற்றுள்ளோம். இந்த புதிய நிறுவனங்களை வரவேற்பதற்தாக புதிய சக்தியோடு இந்தியா எழுந்து நின்று காத்திருக்கிறது. இந்தியாவின் புதிய நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளில் பன்மடங்கு வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இங்கே மிகச்சிறந்த புதிய நிறுவனங்களை பார்க்கிறோம். சுகாதாரம், கல்வி, விவசாயம், தூய்மையான எரிசக்தி மற்றும் ஏழைகளை ஒருங்கிணைக்கக் கூடிய தூய்மையான குடிநீர் வசதி ஆகியவற்றை இந்த புதிய நிறுவனங்களில் பார்க்கிறோம். எங்களின் புதிய நிறுவனங்கள் வெறும் பொருளாதாரத்தில் வெற்றி பெற்ற நிறுவனங்கள் மட்டும் அல்ல. அவை சமூக கட்டமைப்பில் ஒரு முக்கிய அங்கம்.
புதிய தொழில்நுட்பத்தை அரவணைப்பதில் வயது, கல்வி, மொழி மற்றும் வருவாய் ஆகியவை இது வரை வகித்த பங்கை, தற்போது இந்த புதிய தொழில்நுட்பம் மாற்றியுள்ளது. இந்தியாவின் மாற்றத்துக்கான தேவை பெரியது. அதை அடைவற்கான அவசரத் தேவை இப்போது உள்ளது. இதுதான் டிஜிட்டல் இந்தியாவின் பின்னால் உள்ள உந்துசக்தி. நேற்று இரவு நான் நிர்வாகத்தில் சீரமைப்பு, மக்களுக்கான அதிகாரம், குடிமக்களுக்கான தடைகளை அகற்றுவது, புதிய வாய்ப்புகளை உருவாக்குவது, ஆழமான சமூக மாற்றம், வளர்ச்சிக்கான வேகம், தரம் உயர்த்தப்பட்ட சேவைகள், ஏழைகளுக்கென்று வடிவமைக்கப்பட்ட பொருட்கள், குறிப்பிட்ட குழுக்களுக்கான சேவை ஆகியவற்றின் மூலம், இந்த பூமிக்கான எதிர்காலத்தை உறுதி செய்கிறோம்.
எமது எதிர்காலத்தை வடிவமைப்பதில், புதிய நிறுவனங்கள் பெரும்பங்கு வகிக்கும். உட்கட்டமைப்பை மேம்படுத்துவதிலிருந்து, சேவைகளை மேம்படுத்தவது வரை, புதிய பொருட்களை தயாரிப்பதிலிருந்து, மனிதவள மேம்பாடு வரை, அரசுக்கு ஆதரவாக இருப்பதிலிருந்து கணிணி அறிவை வளர்த்தெடுப்பது வரை, டிஜிட்டல் இந்தியா உங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியுள்ளது. புதிய நிறுவனங்களை நான் முதலீட்டுக்கான குறுகிய கால வாய்ப்பாக பார்க்கவில்லை, மாறாக அவற்றை நீண்டகால உறவாகவே பார்க்கிறேன். நமது முயற்சிகள் நமது கற்பனையின் அளவு வரையே நிற்கின்றன. இலவசமாக சேவை தரும் விண்வெளி ஆராய்ச்சித் துறை இன்று நம்மிடம் உள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும், 170க்கும் மேற்பட்ட விண்வெளி தொடர்பான செயலிகளை நாங்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம். இவற்றில் பல, அடுத்தடுத்த முயற்சிகளுக்கான வாகனமாக அமையும்.
முன்னேறிய விஞ்ஞானத்தை வைத்து புதிய வாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமல்ல. நான் இந்த புதிய யோசனைகளையும், புதிய கண்டுபிடிப்புகளையும் கிராமப்புற மக்களின் எதிர்காலத்தை மாற்றியமைப்பதாகவே பார்க்கிறேன். கைவினைப் பொருட்களில் இருந்து, சுற்றுலா வரை, இந்தியாவின் சாத்தியக்கூறுகள் மிக மிக அதிகம். குறிப்பாக சிறப்பான வெற்றியை வெளிப்படுத்தியுள்ள கிராமப்புற பெண்களுக்கான தேவை இது என்றே பார்க்கிறேன். அவர்கள் நமது ஊரக பொருளாதாரத்தை மட்டும் மாற்றவில்லை, நமது சமூகத்தையே மாற்றி அமைக்கிறார்கள்.
எங்களின் வளர்ச்சி வடிவம் பொதுத்துறை, தனியார் துறை என்று பேசுகிறது. நான் சிறு குறுந்தொழில்களை உள்ளடக்கிய தனி நபர் துறை என்ற பதிய துறை குறித்து பேசுகிறேன். இதன் காரணமாகத்தான் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில், புதிய தொழில்கள் குறித்துப் பேசினேன். எங்கள் நோக்கத்துக்கு ஆதரவாக இருக்கும் வகையில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துகிறோம். வழக்கம்போல, அரசின் நிர்வாகச் சிக்கல்களில் அந்த திட்டங்கள் சிக்கிக் கொள்ளாது என்பதை நான் உங்களுக்கு உறுதி கூறுகிறேன். அதில் ஒன்று அடல் முன்னேற்றத் திட்டம். இத்திட்டம் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்துவதற்காக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்ததாக “சேத்து” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். சுய வேலைவாய்ப்பு, திறன் சேர்க்கை ஆகியவற்றை இணைத்து இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டம் புதிய தொழில்களை ஊக்கப்படுத்தும் வகையில் அமைக்கப்படும். புதிய மின்னணு சாதனங்களை உருவாக்குவதற்காக, மின்னணு வளர்ச்சி நிதி என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி உள்ளோம். எங்களின் வரண்முறைப்படுத்தும் வழிமுறைகளையும், தொழில் வழிமுறைகளையும் எளிமையாக்கி, தொழில் தொடங்குவோருக்கு உதவிகரமாக இருக்கும் வகையில் செயல்படுத்துகிறோம். ஆறு லட்சம் கிராமங்களுக்கு ப்ராட்பேன்ட் மற்றும் வைபை வசதியை ஏற்படுத்தி, பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைகழகங்கள் மற்றும் பொது இடங்களுக்கு இலவச வைபை வழங்க உள்ளோம்.
தனிநபர் டேட்டாவுக்கான பாதுகாப்பு, அறிவுசார் சொத்துரிமைக்கான பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா மற்றும் டிசைன் இந்தியா ஆகியவை உங்களுக்கு அற்புதமான வாய்ப்புகளை உருவாக்க உள்ளன. புதிய நிறுவனங்கள் என்று நினைத்ததுமே எங்கள் மனதுக்கு வந்தது, சிலிக்கான் பள்ளத்தாக்குதான். அதனால்தான் எங்கள் முதல் நிகழ்சிக்காக, சிலிக்கான் பள்ளதாக்கை தேர்ந்தெடுத்துள்ளோம். இந்தியாவும், அமெரிக்காவும் இந்த புதிய முயற்சியில் இயல்பான பங்குதாரர்கள்.
இங்கே புதிதாக தொடங்கும் நிறுவனங்களில் 15 சதவிகிதம் இந்தியர்கள் என்று என்னிடம் கூறினார்கள். அமெரிக்க நிறுவனங்களின் வளர்ச்சியில், இங்கேயும் , இந்தியாவிலும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாடுபடுகிறார்கள். பலர் அதற்கு தலைமைப் பொறுப்பு ஏற்றுள்ளனர். எங்களின் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சிக் கூடங்கள் மற்றும் நிறுவனங்கள், அடுத்த தலைமுறைக்கான இயற்கை எரிவாயு, சூரியஒளி எரிசக்தி மற்றும் எரிசக்தி திறன் ஆகியவற்றை வளர்ப்பதற்காக பணியாற்றுகின்றன.
ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பல விஞ்ஞானிகள், டெல்லியில் உள்ள இந்தியர்களோடு கூட்டமைத்து, பல்வேறு விதமான மருத்துவ சாதனைகளை கிராமப்புரத்துக்காக உருவாக்கி வருகின்றனர். எம்ஐடி டாட்டா நிறுவனத்தின் கேத்வொர்க்ஸ் என்பது, சூரியஒளி மிச்கத்தி மூலமாக சிறு விவசாயிகளின் வாழ்வையே மாற்றி அமைக்கிறது. இங்கே நம்மிடையே, அவர் பெயரிலேயே ஆய்வகம் வைத்திருக்கும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனு பிரகாஷ் இருக்கிறார். நமது கூட்டுறவு மற்றும் ஒத்துழைப்புக்கான பலன் இது. இங்கே அமர்ந்து கொண்டு, நீங்கள் இந்திய கிராமப்புரத்தில் இருக்கும் ஒரு பெண் குழந்தையின் வாழ்வை மாற்றியமைக்கலாம். இதே போல, இந்திய கிராமப்புரத்தில் இருக்கும் ஒரு பெண் குழந்தை, இந்த கண்காட்சியை பார்வையிட்டு, அவளுக்கென்று ஒரு கனவை உருவாக்கலாம். மும்பை அல்லது பே பகுதியைச் சேர்ந்த யாரோ ஒருவர் அவள் கனவை நனவாக்க உதவலாம். இதுதான் தொலைதூரத்தில் இருக்கும் வாழ்வுகளை இணைத்து வாழ்வை வளமாக்கும் டிஜிட்டல் இணைப்பின் சாதனை. இதுதான் இளைய சமுதாயம் மற்றும் புதிய சிந்தனைகளின் சாதனை. அது இந்தியா மற்றும் அமெரிக்காவிடையே ஒரு உறவை ஏற்படுத்தி, இரு நாடுகளின் கூட்டுறவிற்கு அடித்தளமாக அமையும். உலகின் முன் உள்ள சவால்களை சமாளிக்கவும், மனித இனத்தின் பிரச்சினைக்ளுக்கு தீர்வு காணவும், நம்மை டிஜிட்டல் நூற்றாண்டில் இணைத்துக் கொள்ளவும் அது வகை செய்கிறது. இன்று பல்வேறு புதிய தொழில் இணைப்புகள் ஏற்படுவதை காண மகிழ்ச்சியாக இருக்கிறது.
இன்று பாரத் நிதி என்ற நிதியத்தை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். அது இந்தியாவுக்கு மட்டுமானதல்ல. சுகாதாரம், விவசாயம், மறுசுழற்சி எரிசக்தி மற்றும் தொழில்நுட்பத்திற்கானது. இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகளுக்காக க்வால்காம் நிறுவனம் 150 மில்லியன்களை ஒதுக்கியிருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்துக் கொள்கிறேன். டி.ஐ.இ. நிறுவனம் புதிய ஆலோசனைகளைக் கூறி புதிய நிறுவனங்களை தொடங்குவதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தித் தருவதற்கும் நன்றி கூறுகிறேன்.
உங்களின் அற்புதமான அறிவாலும் ஆக்க சக்தியாலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்பதை நான் அறிவேன். உங்களுக்கு எப்போது உதவி வேண்டுமோ, எப்போது உங்கள் பாதைகளில் தடை வருகிறதோ, அப்போது உங்களுக்கு உதவ நாங்கள் காத்திருக்கிறோம்.
நாஸ்காம் மற்றும் இந்திய மேலாண்மை மையம், அஹமதாபாத் மற்றும் சிலிக்கான் பள்ளதாக்கின் டி.ஐ.இ. நிறுவனத்துக்கும் இந்த நேரத்தில் நன்றிகளை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். வருங்காலத்தில் பல்வேறு இந்திய இளைஞர்களுக்கான உந்துசக்தியாகவும், பல புதிய கனவுகளை உருவாக்கவும், பல்வேறு இந்திய அமெரிக்க கூட்டுறவை உருவாக்கவும் நீங்கள் முயல்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
நன்றி.
Idea of Start Ups is ancient. Each economic age is defined by disruption of previous one by evolution of ideas that displace old ones: PM
— PMO India (@PMOIndia) September 27, 2015
Today, the Startups defy the natural rates of growth. An idea can become a global name within a year: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 27, 2015
India’s own ecosystem of startups is evolving rapidly. It is driven by the energy, enterprise and innovation of our youth: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 27, 2015
India has woken up to potential of Startup Ventures with great enthusiasm & energy. In the past few years they have grown exponentially: PM
— PMO India (@PMOIndia) September 27, 2015
Scale of India's development needs is huge.Need to achieve it is urgent. We cannot simply continue on traditional paths to development: PM
— PMO India (@PMOIndia) September 27, 2015
I see Startups, not as short term investments but as long term commitments: PM @narendramodi https://t.co/4cGFrfa2jZ
— PMO India (@PMOIndia) September 27, 2015
I want to see the idea and the spirit of Startups light up the economies and the fortunes of people in rural India: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 27, 2015
Unbelievable vibrancy & enthusiasm at India-US start-up Konnect. Start-ups are natural engines of growth & are key to India's transformation
— Narendra Modi (@narendramodi) September 28, 2015
I elaborated on how the Govt. is encouraging the creation of a dynamic start-up ecosystem that will transform the lives of India's youth.
— Narendra Modi (@narendramodi) September 28, 2015
Start-ups are more than commercial success stories. They are powerful examples of social innovation. http://t.co/MsdQ4ffv3e
— Narendra Modi (@narendramodi) September 28, 2015