Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறையில் இந்தியா – கினியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை  ஒப்புதல்


  பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறையில், இந்தியா – கினியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நோக்கம்:

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம் வருமாறு:

  1. கூட்டுறவு அமைப்பு ரீதியான நட்புறவுக்கு அடித்தளமிடுதல்
  2. இருதரப்புக்கும் பலன் அளிக்கக் கூடிய, சமமான மற்றும் பரஸ்பர பரிமாற்ற அடிப்படையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஊக்குவித்து மேம்படுத்துதல்
  • சூரியசக்தி மின்உற்பத்தி, காற்றாலை மின்சாரம், உயிரி- எரிசக்தி மற்றும் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரித்தல், சிறிய அளவிலான நீர்த்தேக்கம் மற்றும் திறன் உருவாக்கம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைத்தல்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இருநாடுகளிடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவும்.