பி.எம்.இந்தியா
புதுமைக் கண்டுபிடிப்பு, தொழில்முனைவுத் துறைகளில் ஒவ்வொரு தனிநபருக்கும் வெவ்வெறு வகையிலான சிந்தனையும், தனித்துவமிக்க படைப்பு தொலைநோக்குப் பார்வையும் உள்ளது என்றும், இந்த பன்முகத்தன்மை புதிய வாய்ப்புகளை உருவாக்குவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். ஒவ்வொரு நீர் ஆதாரமும் ஒரு தனித்துவமான சுவையைக் கொண்டிருப்பது போல், ஒவ்வொரு திறமையாளருக்கும் சுயமான, தனித்துவமிக்க அடையாளமும் பங்களிப்பும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பன்முகச் சிந்தனைகள், திறன்களை ஒருங்கிணைப்பதன் மூலம் புதுமைக் கண்டுபிடிப்பும், வளர்ச்சியும் சாத்தியமாவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார் –
புதுமைக் கண்டுபிடிப்பு, தொழில்முனைவுத் துறைகளில் ஒவ்வொரு தனிநபருக்கும் வெவ்வெறு வகையிலான சிந்தனையும், தனித்துவமிக்க படைப்பு தொலைநோக்குப் பார்வையும் உள்ளது, இந்த பன்முகத்தன்மை புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. ஒவ்வொரு நீர் ஆதாரமும் ஒரு தனித்துவமான சுவையைக் கொண்டிருப்பது போல், ஒவ்வொரு திறமையாளருக்கும் சுயமான, தனித்துவமிக்க அடையாளமும் பங்களிப்பும் உள்ளது. பன்முகச் சிந்தனைகள், திறன்களை ஒருங்கிணைப்பதன் மூலம் புதுமைக் கண்டுபிடிப்பும், வளர்ச்சியும் சாத்தியமாகிறது என்று சுபாஷிதம் கூறுகிறது.
***
Release ID: 2272819
SS/IR/LDN/KR
पिण्डे पिण्डे मतिर्भिन्ना कुण्डे कुण्डे नवं पयः।
— Narendra Modi (@narendramodi) June 15, 2026
जातौ जातौ नवाचाराः नवा वाणी मुखे मुखे॥ pic.twitter.com/KZHjUsEMzb