Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புது தில்லியில் பிஜி தூதரத்திற்கு அளிக்கப்பட்டுள்ள நிலத்திற்கு வணிக கட்டணம் வசூலிப்பதற்கு விலக்கு அளிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


புது தில்லியில் பிஜி தூதரத்திற்கு அளிக்கப்பட்டுள்ள நிலத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நேரத்தில் விதிக்கப்பட்ட வணிக கட்டணத்தை வசூலிப்பதற்கு விலக்கு அளிப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புது தில்லி சாணக்யபுரியில் 2800 சதுர மீட்டர் அளவுடைய பிளாட் எண்: 31-பி பிஜி தூதரகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பிஜி நாட்டின் சுவாவில் இந்திய தூதரகத்திற்கு வழங்கப்பட்ட நிலத்திற்கு அளிக்கப்பட்ட அதே சலுகைகள் மற்றும் விதிவிலக்குகள் ஆகியவற்றை பிஜிக்கும் அளிக்கும் வகையில் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பின்னணி:

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிஜி நாட்டில் இந்திய தூதரகம் கட்டுவதற்காக பிஜி அரசு சுவாவில் 6695 சதுர மீட்டர் பரப்புடைய இடத்தை சிறப்பு குத்தகை அடிப்படையில் அளித்தது. அதன்படி 99 வருடத்திற்கு இந்த இடம் இந்திய தூதரகத்திற்கு குத்தகையாக அளிக்கப்படும். அதற்கு ஒவ்வொரு ஆண்டும் 100 பிஜியன் டாலர் வாடகையாக வசூலிக்கப்படும். மேலும், இது ஐந்து ஆண்டிற்கு ஒரு முறை மதீப்பீடு செய்யப்படும். அதேபோல், பரஸ்பர அடிப்படையில் நிலப் பரிமாற்றத்தை பிஜி அரசு கேட்டுக்கொண்டது. பிஜி நாட்டுடனான இருதரப்பு உறவின் சிறப்பு தன்மையை வைத்து, பரஸ்பர அடிப்படையிலான நிலப் பரிமாற்ற முறையில் பிஜி தூதரத்திற்கு அளிக்கப்பட்ட நிலத்திற்கு வணிக கட்டணம் வசூலிப்பதற்கு விலக்கு அளிப்பது சரியான முடிவாக கருதப்பட்டது.

*****