பி.எம்.இந்தியா
புத்த பவுர்ணமியை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது:
“அனைவருக்கும் புத்த பவுர்ணமி வாழ்த்துகள். இன்று கவுதம புத்தரின் தனித்துவமான பண்புகளை நினைவு கூறுகிறோம். அவரின் சிறந்த எண்ணங்கள் நம்மைத் தொடர்ந்து வழிநடத்திச் செல்லும்.
இணக்கமான, நேர்மையான மற்றும் கருணை மிகுந்த சமூகத்தை உருவாக்குவதில் கவுதம புத்தர் நம்மைத் தொடர்ந்து ஊக்கமளிப்பார்” என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
***
Greetings on the auspicious occasion of Buddha Purnima. pic.twitter.com/wCFP9zUezc
— Narendra Modi (@narendramodi) May 10, 2017