Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டம் 2008 (2009-ல் 7)-ல் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டம் 2008-ன் எல்லைவரம்பை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கும் விரிவுபடுத்தும் வகையிலான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், அரசியலமைப்பு சட்டத்தின் 7-வது அட்டவணையில் உள்ள முதல் பட்டியல் (மத்திய பட்டியல்) மற்றும் மூன்றாவது பட்டியலில் (பொதுப் பட்டியல்) உள்ள எந்த விவகாரங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் சேகரிப்பும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு விரிவுபடுத்தப்படும். அரசியலமைப்பு (ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு பொருந்தும்) உத்தரவு 1954-ன் கீழ் இது செயல்படுத்தப்படும். இந்த சட்டத் திருத்தத்தின்மூலம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு வழிமுறை வலுவாகும்.

இந்த சட்டத் திருத்தம் என்பது:

(அ) அரசியலமைப்பு (ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு பொருந்தும்) உத்தரவு 1954-ன் கீழ், மாநில அரசுக்கு என்று ஒதுக்கப்படாத விவகாரங்களில், இந்த சட்டத்தின் எல்லை வரம்புகளை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு விரிவுபடுத்த வழிவகுக்கும்.

(ஆ) புள்ளி விவரங்கள் சேகரிப்பு நடவடிக்கைகளை சிறப்பாக ஒருங்கிணைக்கவும், இரட்டிப்பு பதிவுகளை தவிர்க்கும் வகையிலும், அரசு துறைகளுக்கு ஆலோசனை வழங்கவும், மத்தியிலும், ஒவ்வொரு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும் ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க வழிவகை செய்கிறது.

பின்னணி

பொருளாதாரம், புவிஇடங்கள், சமூகம், விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் விவகாரங்களில் புள்ளிவிவரங்களை சேகரிப்பதற்காக புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டம் 2008, கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைத் தவிர, மற்ற ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவையில், ஜம்மு-காஷ்மீர் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டம் 2010 கொண்டுவரப்பட்டது. இது, ஒட்டுமொத்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கும் விரிவுபடுத்துகிறது. மேலும், மத்திய சட்டத்தின் மாதிரி வடிவமாகவே இந்த சட்டம் உள்ளது. புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டம் 2008 மற்றும் ஜம்மு-காஷ்மீர் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டம் 2010 ஆகியவை, அரசியலமைப்பு (ஜம்மு-காஷ்மீருக்கு பொருந்தும்) உத்தரவு 1954-ன் அடிப்படையில், மத்திய பட்டியலில் உள்ள புள்ளிவிவரங்கள் விவகாரங்களுக்கு பொருந்தாது. இதன் காரணமாக, போதிய சட்டங்கள் இல்லாத நிலை உருவாகியுள்ளது. மேலும், புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டம் 2008-ல் பொதுப்பட்டியலில் உள்ள விவகாரங்களில் மத்திய அரசின் எல்லை வரம்பும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு பொருந்தாது. இந்த குறைபாடுகளை களையும் வகையில், சட்டத் திருத்தம் கொண்டுவரப்படுகிறது.