Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பூட்டானில் உருவாகும் மங்காடெச்சு நீர்மின் உற்பத்தி திட்டத்தின் திருத்தப்பட்ட செலவு மதிப்பீடு


பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை பூட்டானில் தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் 720 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மங்காடெச்சு நீர்மின் உற்பத்தி திட்டத்தின் ரூ. 4020.63 கோடிக்கான திருத்திய செலவு மதிப்பீட்டிற்கு தனது ஒப்புதலை அளித்தது.

இந்தத் திட்டமானது தனது உபரி மின்சாரத்தை இந்தியாவிற்கு வழங்கும். இதன் மூலம் நாட்டில் மின் வழங்கும் திறனை மேம்படுத்தும். இந்த திருத்திய செலவு மதிப்பீட்டிற்கு விரைவாக அனுமதி அளிப்பதன் மூலம் திட்ட வேலைகள் எவ்வித தடையுமின்றி தொடர வழிவகுக்கும்.

இந்த மங்காடெச்சு நீர்மின் உற்பத்தி திட்டத்தை மேற்கொள்ள இருநாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தம் இந்தியாவிற்கும் பூட்டானுக்கும் இடையே 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கையெழுத்தானது. (மார்ச் 2008 விலைவாசி அளவில்) ரூ. 2896.3 கோடி என்ற செலவு மதிப்பீட்டிற்கு ஒப்புதல் பெறப்பட்ட இந்த திட்டத்திற்கான நிதியை 30 சதவீதம் நிதியுதவியாகவும், மீதமுள்ள 70 சதவீதத்தை ஆண்டுக்கு 10 சதவீத வட்டி என்ற விகிதத்தில் கடனாகவும் இந்தியா வழங்கவும், இந்தக் கடனை பூட்டான் முப்பது சமமான அரையாண்டுத் தவணைகளில் திருப்பிச் செலுத்தவும் இந்த ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது. தற்போது இந்தத் திட்டத்திற்கான செலவானது மொத்தத்தில் ரூ. 1124.359 கோடி அதிகரித்துள்ளது.

மார்ச் 2008க்கும் மார்ச் 2014க்கும் இடையேயான பணவீக்கம், இத்திட்டப்பகுதிக்கு மேலே நீர்பிடிப்பிற்கான அணைக்கான எல்லைச் சுவரை கட்டுவது, நாணய பரிமாற்றத்தில் உருவான மாற்றங்கள் மற்றும் இதர பலவும் இவ்வாறு திருத்திய செலவு மதிப்பீடு உயரக் காரணமாக அமைந்தன.


*******