Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பெங்களூருவில் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கெலுடன் பிரதமரின் நிகழ்ச்சிகள்

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பெங்களூருவுக்கு பயணம் மேற்கொண்டார்.

பெங்களூருவில் போஷ் பொறியியல் மற்றும் கண்டுபிடிப்புக்கான நிறுவனத்தின் ஜெர்மனி நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்க்கெலை பிரதமர் வரவேற்றார். கண் நோய்களை கண்டுபிடிப்பது மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை அளிப்பது போன்றவற்றை சாதாரண மக்களுக்கும் உதவும் வகையில் தீர்வுகளை உருவாக்குவது குறித்து அவர்கள் ஆய்வு செய்தார்கள். போஷ் தொழிற்கல்வி மையத்தில் இரண்டு தலைவர்களுக்கும் திறன் மேம்பாடு குறித்து விளக்கப்பட்டது. இந்த மையம் பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்திய மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது.

பிரதமரும் ஜெர்மனி நாட்டின் அதிபரும் நாஸ்காம் மற்றும் ஃப்ரான்ஹோஃபர் நிறுவனமும் ஏற்பாடு செய்திருந்த வர்த்தக கருத்தரங்கில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பிரதமர் பேசும்போது உலகின் பல நாடுகளில் பொருளாதார மந்த நிலமை காணப்படும்போது இந்தியா பொருளாதாரத்தில் சிறந்து விளங்குகிறது என்று கூறினார்.

முதலீட்டாளர்களின் நீண்டகால எதிர்பார்ப்புகள் குறித்து பிரதமர் பேசும்போது இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளை விவரித்தார். இந்தியாவில் முதலீடு செய்வதற்கான பல்வேறு வாய்ப்புகள் குறித்தும் அவர் பேசினார்.

எங்கள் கனவுகளை நாங்கள் நனவாக்க உங்கள் பங்களிப்பு மிகவும் அவசியமாகும். நமது இலக்குகளை விரைவாகவும், திறமையாகவும் அடைய ஜெர்மனி நாட்டு நிறுவனங்களுக்கு சிறந்த வாய்ப்புகளை நாம் அளிக்கிறோம். 50 மில்லியன் வீடுகளை கட்டுவது முதல் 100 நவீன நகரங்களை அளிப்பது வரை வாய்ப்புகள் உள்ளன; ரயில்வே இணைப்புகள் மற்றும் புதிய ரயில்வே நிலையங்களை நவீனப்படுத்துதல் என்பது முதல் கட்டமைப்பு வசதிகளை அளிப்பது வரை; 175 ஜிகா வாட் அளவிற்கு புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியை உற்பத்தி செய்வது முதல் அவற்றின் பரிமாற்றம் மற்றும் விநியோகம் ஆகியவற்றை உறுதி செய்தல்; தேசிய நெடுஞ்சாலைகள், பாலங்கள், மற்றும் மெட்ரோ ரயில் ஆகியவை. இதுபோன்ற பெரிய அளவிலான உற்பத்தி மற்றும் கட்டமைப்பு வசதியை உருவாக்குவது ஆகியவை எந்த ஒரு நாட்டிலும் இருக்காது. இதுபோன்ற பெரிய அளவிலான திட்டங்கள் உலகில் எந்த நாடும் அளிக்க இயலாது. டிஜிட்டல் இந்தியா மற்றும் திறன் இந்தியா ஆகிய இயக்கங்கள் மூலம் இந்த சக்தியை நாங்கள் பெறுவோம். எங்களது ஆற்றலை முழுவதுமாக வெளிப்படுத்த இந்தியாவில் நிறுவனங்களை அமைக்கும் இயக்கத்தையும் துவக்கி உள்ளோம் என்று பிரதமர் கூறினார்.

இந்தியாவின் மென்பொருள் உலகில் வன்பொருளை இயக்கும்; திறன்மிகு இந்தியா தொழில்நுட்பத்தை கற்றுத் தேறும்; இந்தியாவில் உள்ள சந்தை உற்பத்தியை ஊக்குவிக்கும் என்றும் பிரதமர் கூறினார்.

“ஜெர்மனி நாட்டின் பொறியியல் இந்திய தகவல்தொழில்நுட்பம் ஆகியவை இணைந்து உலக தரம்வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்ய முடியும் என்ற அதிபர் மெர்க்கலின் தொலைநோக்கு பார்வையை நான் பாராட்டுகிறேன். இந்தியாவை விட்டு அவர் புறப்படும் இச்சமயத்தில் நான் அவருக்கு நன்றி செலுத்துகிறேன். இந்தப் பயணம் பயனுள்ளதாக உள்ளது. இதன் மூலம் இந்தியா மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகள் புதிய உச்சத்தை எட்டும்” என்று பிரதமர் ட்வீட்டரில் கூறியுள்ளார்.

***