பி.எம்.இந்தியா
பெஹல் திட்டத்தில் பத்து கோடி மக்களுக்கு மேல் தங்களை பதிவு செய்துள்ளதை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் தெரிவித்ததாவது:-
பெஹல் திட்டத்திற்காக 10 கோடி மக்களுக்க மேல் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு முக்கிய சாதனையாகும். இது உலகளவில் உள்ள பண பரிமாற்ற திட்டங்களில் பெஹல் திட்டத்தை பெரிய திட்டமாக மாற்றி உள்ளது. பயணாளிகளுக்கும் அதிகாரிகளுக்கும் எனது வாழ்த்துகள்.
பெஹல் திட்டம் கல்ல சந்தைகளுக்கு முடிவு கொண்டு வருவதோடு. மானியம் மக்களுக்கு முறையாக சென்று அடைவதையும் உறுதி செய்யும். நாட்டின் வளர்ச்சியில் பெஹல் முக்கிய பங்கு வகிக்கிறது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.