Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பேகம் கலிதா ஜியா விரைவில் குணமடைய பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


பங்களாதேஷின் பொது வாழ்க்கைக்கு பல ஆண்டுகள் பங்களிப்பு செய்துள்ள பேகம் கலிதா ஜியாவின் உடல்நலம் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். எந்த வகையில் உதவி செய்ய வேண்டும் என்றாலும், சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று திரு மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“பங்களாதேஷின் பொது வாழ்க்கைக்கு பல ஆண்டுகள் பங்களிப்பு செய்துள்ள பேகம் கலிதா ஜியாவின் உடல்நலக் குறைபாடு அறிந்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். அவர் விரைவில் குணமடைய நமது பிரார்த்தனைகளும், நல்வாழ்த்துகளும் எந்த வகையில் உதவி செய்ய வேண்டும் என்றாலும், சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது.”

***

(Release ID: 2197341)

AD/SMB/RJ/RK