Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைவிற்கு பிரதமர் இரங்கல்


பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“பேராசிரியார் ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு தலைசிறந்த விஞ்ஞானியும் கல்வியாளரும் ஆவார். அவரது அறிவாற்றலும் விடாமுயற்சியும் உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் ஊக்கம் அளிக்கிறது. அவரது மறைவு வேதனை அளிக்கிறது. பேராசிரியர் ஹாக்கிங்கின் முன்னோடியான பணிகள் நமது உலகத்தை ஒரு சிறந்த இடமாக மாற்றியுள்ளது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

******