பி.எம்.இந்தியா
ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் புனிதப்பயணம் மேற்கொண்ட பக்தர்களின் பேருந்து விபத்திற்குள்ளானதில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் வேதனை தெரிவித்தார்.
“அமர்நாத் புனிதப் பயணம் மேற்கொண்ட பக்தர்கள் பயணித்த பேருந்து விபத்திற்குள்ளாகி உயிரிழப்பு நேரிட்டது குறித்த மிகுந்த வேதனை அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருடன் என் எண்ணங்கள் உள்ளன.
ஜம்மு காஷ்மீர் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் நிவாரண நிதியாக வழங்கி பிரதமர் உத்தரவிட்டுள்ளார். விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ 50000 வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
Extremely pained by the loss of lives of Amarnath Yatris due to a bus accident in J&K. My thoughts are with the families of the deceased.
— Narendra Modi (@narendramodi) July 16, 2017
I pray that those injured in the bus accident in J&K recover soon.
— Narendra Modi (@narendramodi) July 16, 2017
PM announced ex gratia of Rs. 2 lakhs for next of kin of those killed & Rs. 50,000 for those seriously injured, in the bus accident in J&K.
— PMO India (@PMOIndia) July 16, 2017