Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பேஸ்புக் தலைமையகத்திற்கு வருகை தரும் பிரதமர்-கேள்வி பதில் நேரத்தில் பங்கேற்க அழைப்பு


பேஸ்புக் தலைமையகத்திற்கு செப்டம்பர் 27. 2015 அன்று செல்ல உள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி. அங்கு நடைபெறவுள்ள கேள்வி பதில் நேரத்தில் கேள்விகளைக் கேட்டு பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிந்துள்ள செய்தி:

பேஸ்புக் தலைமையகத்திற்கு வருகை புரியுமாறு அழைப்பு விடுத்த திரு மார்க் ஜக்கர்பர்க்கிற்கு நன்றி. செப்டம்பர் 27, 2015 அன்று இரவு 10 மணியளவில் (இந்திய நேரம்) நடைபெறவுள்ள கேள்வி பதில் நேரத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இந்த கலந்துரையாடலில் பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்படுவதுடன், இது நினைவுக்குரிய கலந்துரையாடலாக இருக்கும்.

உங்களின் பங்கேற்று இல்லாமல் இந்நிகழ்ச்சி முழுமையடையாது. உங்களின் கேள்விகளை பேஸ்புக்கில் பதிவு செய்யுங்கள்.

‘நரேந்திர மோடி கைப்பேசி செயலியிலும் உங்களின் கேள்விகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களின் கேள்விகள் இந்நிகழ்ச்சியை நினைவுகூரும் வகையில் மாற்றும் என்று பிரதமர் தனது பேஸ்புக்கில் பகிர்வில் கூறியுள்ளார்.

*****