Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பொதுத்துறை மருந்து நிறுவனங்கள் நான்கின் உபரி நிலத்தை தேவை அடிப்படையில் விற்பனை செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


இந்துஸ்தான் ஆன்டிபயாடிக் லிமிடெட் (ஹெச்.ஏ.எல்), இந்தியன் டிரக்ஸ், பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் (ஐ.டி.பி.எல்), ராஜஸ்தான் டிரக்ஸ், பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் (ஆர்.டி.பி.எல்), பெங்கால் கெமிக்கல்ஸ், பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் (பி.சி.பி.எல்) ஆகிய நான்கு பொதுத்துறை மருந்து நிறுவனங்களின் உபரி நிலத்தை அவற்றின் நிலுவையிலுள்ள கடன்களை செலுத்துவதற்காக விற்பனை செய்யும் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த்து. இவ்வாறாக தேசிய சொத்துக்கள் சிறப்பான தேசிய நலன்களுக்குப் பயன்படுத்தப்படும்.

வெளிப்படையான திறந்த போட்டி ஏலத்தின் மூலம் அரசு அமைப்புகளுக்கு இந்த நிலம் விற்பனை செய்யப்படும். விற்பனையில் கிடைத்த தொகை கொண்டு இந்த நிறுவனங்களின் நிலுவைக் கடன்கள் தீர்க்கப்படும். இந்த பொதுத்துறை நிறுவனங்களில் தாமாக ஓய்வு பெறும் திட்டம் / தாமாகப் பிரிந்து செல்லும் திட்டம் ஆகியன அமல்படுத்தப்படும்.

நிலத்தின் எஞ்சியுள்ள பகுதி மத்திய முதலீடு, பொதுச் சொத்துக்கள் நிர்வாகத்துறை மற்றும் பொதுத்துறை, நிறுவனங்கள்துறை ஆகியவற்றின் நெறிமுறைகளின்படி நிர்வகிக்கப்படும்.

கடன்களை திரும்பச் செலுத்தியபின் ஐ.டி.பி.எல் மற்றும் ஆர்.டி.பி.எல் நிறுவனங்களை மூடிவிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஹெச்.ஏ.எல், பி.சி.பி.எல். நிறுவனங்களை விற்பனை செய்வது குறித்து ஆராயப்படும். இந்த நிறுவனங்களின் நிர்வாகத்தை கவனிக்கும் மத்திய மருந்துகள்துறை இதற்கான காலக்கெடுவுடன் கூடிய தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.