பி.எம்.இந்தியா
10 பொதுத் துறை வங்கிகளை நான்கு பொதுத் துறை வங்கிகளாகப் பெரும் இணைப்பு செய்வதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
• இதன்படி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆப் இண்டியா ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும்,
• சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியுடனும்,
• ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை யூனியன் பேங்க் ஆப் இண்டியாவுடனும்,
• அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடனும் இணைக்கப்படுகின்றன.
இந்த இணைப்பு 1.4.2020 முதல் அமலுக்கு வரும். இதனால், 7 பெரிய பொதுத்துறை வங்கிகள் உருவாக்கப்பட்டு, தேசிய அளவில் 8 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறும். இந்தப் பெரும் இணைப்பு உலகளாவிய வங்கிகளுடன் ஒப்பிடும் அளவுக்கு நிலை உயர உதவும். இந்திய அளவிலும், உலக அளவிலும் போட்டியிடவும் முடியும்.
***************