Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பொறியாளர் தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து


பொறியாளர் தினத்தை ஒட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். பொறியாளர் தினமாக கடைபிடிக்கப்படும் பாரத ரத்னா எம். விஸ்வேஸ்வரய்யாவின் சேவைகளை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

“தடம்-பதிக்கக் கூடிய ஏராளமான கண்டுபிடிப்புகளுக்குக் காரணமான, அறிவாற்றல், கடமையுணர்வு & புதுமையான சிந்தனைகள் கொண்ட அனைத்துப் பொறியாளர்களுக்கும், பொறியாளர் தினத்தில் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாரத ரத்னா எம். விஸ்வேஸ்வரய்யா அவர்களுக்கு அவருடைய பிறந்த நாள் ஆண்டுவிழாவில் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் வணக்கம் தெரிவிக்கிறோம். முன்னோடியான ஒரு பொறியாளராக அவர் நினைவுகூரப்பட்டு, மதிக்கப்படுகிறார்” என்று பிரதமர் கூறியுள்ளார்.