Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

போதைப் பொருள் கடத்தலை தடுக்கும் வகையில் இந்தியா மற்றும் மொசாம்பிக் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, போதைப் பொருள் தேவையை குறைத்தல் மற்றும் சட்டவிரோதமான போதைப் பொருள் மற்றும் அது தொடர்பான ரசாயன பொருட்களை கடத்துவதை தடுக்கும் பொருட்டு, இந்தியா மற்றும் மொசாம்பிக் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தது.

போதைப் பொருள் மற்றும் அது தொடர்பான இதர பொருட்கள் கடத்தப்படுவது தடுப்பது, மற்றும் தகவல் மற்றும் நிபுணத்துவ பரிமாற்றத்துக்கு இரு நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும்.