பி.எம்.இந்தியா
போபாலில் உள்ள போபால் நினைவு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் பொதுப் பணி மருத்துவ அதிகாரிகள், சிறப்பு நிலை மருத்துவர்கள் மற்றும் கற்பிக்கும் மருத்துவ ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை மத்திய சுகாதார சேவைகள் மற்றும் இதர மத்திய மருத்துவமனைகள்/நிறுவனங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு நிகராக 65 ஆக அதிகரிக்கும் வகையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் சுகாதார ஆராய்ச்சித் துறையின் யோசனைக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்தது.
பொதுப் பணி மருத்துவ அதிகாரிகள் மற்றும் கற்பித்தல், கற்பிக்காத மற்றும் மத்திய சுகாதார சேவைகளில் சார்நிலைகளில் உள்ள சிறப்பு நிபுணர்கள் ஓய்வு பெறும் வயது கடந்த 2018 ஜனவரி மாதம் அறிவிக்கை ஒன்றின் மூலம் 65 ஆக உயர்த்தப்பட்ட்து.
அரசின் இந்த முடிவு பரோடா நினைவு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உள்ள மருத்துவ ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறையை போக்கவும் போபால் வாயுக் கசிவு விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நோயாளிகள் பராமரிப்பு வசதியை மேம்படுத்தும்.
——-