Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ப்ரிக்ஸ் நாடுகளில் உள்ள ப்ரிக்ஸ் பல்கலைக்கழகங்களோடு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்துக்கு ஏற்பு


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, ப்ரிக்ஸ் நாடுகளில் உள்ள ப்ரிக்ஸ் பல்கலை கழகங்களோடு கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஒப்புதலை வழங்கியது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள், நவம்பர் 2015ல் ரஷ்யாவின் மாஸ்கோ நகரில், 3வது ப்ரிக்ஸ் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் நடைபெற்றது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ப்ரிக்ஸ் நாடுகளிடையே, அறிவியல் ஆராய்ச்சி, உயர்கல்வி, தகவல் பரிமாற்றம், ஆய்வு, சிறந்த நடைமுறைகளை செயல்படுத்துதல், கூட்டு ஆராய்ச்சி, மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் பரிமாற்றம் ஆகியவற்றுக்கு பெரும் வகையில் உதவி செய்யும்.