Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகாபிரபு ஜகந்நாதர் மீது தனது நம்பிக்கையை விளக்கியுள்ள குடியரசுத்தலைவரின் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


மகாபிரபு ஜகந்நாதர் மீதான தனது வாழ்நாள் பக்தியை குழந்தைப் பருவ நினைவுகள் முதல் தனது வாழ்க்கையை வடிவமைத்த ஆன்மீக அனுபவங்கள் வரை விவரித்து குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். 

ரதயாத்திரையின் சிறப்பையும் மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள தனது பயணத்தில் தொடர்ந்து வழிகாட்டியாகத் திகழும் நம்பிக்கை குறித்தும் குடியரசுத்தலைவர் எழுதியுள்ளதாக திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“மிகவும் தனிப்பட்ட ரீதியில் தனது சிந்தனைகளை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, மகாபிரபு ஜகந்நாதர் மீதான தனது வாழ்நாள் பக்தியை குழந்தை பருவ நினைவுகள் முதல் தனது வாழ்க்கையை வடிவமைத்த ஆன்மீக அனுபவங்கள் வரை விவரித்துள்ளார்.

ரதயாத்திரையின் சிறப்புக் குறித்தும் மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள தனது பயணத்தில் தொடர்ந்து வழிகாட்டும் நம்பிக்கைக் குறித்தும் அவர் எழுதியுள்ளார்.”

***

(Release ID: 2285313

SS/IR/KPG/RJ