பி.எம்.இந்தியா
சரக்கு மற்றும் சேவை வரி மசோதா (ஜி.எஸ்.டி,) இந்திய அணியின் மகத்தான முன்னேற்றம், மறுமலர்ச்சியை நோக்கிய மகத்தான முன்னேற்றம் ஒளிவு மறைவற்ற நிர்வாகத்தை நோக்கிய மகத்தான முன்னேற்றம் என்று பிரதமர் நரேந்திர மோடி வர்ணித்தார்.
ஜி.எஸ்.டி மசோதா மீது மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் அவர் குறுக்கிட்டுப் பேசினார்.
இந்த நாள், 1942 ஆகஸ்ட் 8ம் தேதிதான் மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு என்று முழக்கமிட்ட நாள். வரி பயங்கரவாதத்திலிருந்து நாடு விடுதலையை தொடங்குவதும் அதே நாள்தான்.
இந்த மசோதாவை நிறைவேற்றுவது எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் வெற்றி அல்ல, இந்திய ஜனநாயகத்தின் வெற்றி.
சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மீது நடந்த விவாதத்தின் போது திருமதி. சோனியா காந்தியையும் முன்னாள் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங்கையும் விவாதத்தில் கலந்து கொள்ளுமாறு நான் அழைப்பு விடுத்தேன். இவர்களில் ஒருவர் மக்களவை உறுப்பினர், மற்றவர் மாநிலங்களவை உறுப்பினர்
ஜி.எஸ்.டி, மசோதா மீது ஒருமித்த கருத்து உருவாகியிருப்பது அரசியல் பிரச்சினைகளை விட தேசிய பிரச்சினைகள் இந்தியாவில் உயர்ந்தது என்பதையே காட்டுகிறது.
நமது இரயில்வேக்கள், அகில இந்திய சேவைகள் வரிசையில் பாரத மாதாவின் கழுத்தில் திகழும் ஆபரணம், ஒரே பாரதத்தின் கழுத்தில் உள்ள நெக்லஸ் ஆபரணத்தில் ஒளிரும் முத்து ஜி.எஸ்.டி.
ஜி.எஸ்.டி.-யை அறிமுகம் செய்வதன் மூலம் ஒரே சீரான வரிமுறையை கொண்டு வருவது நமது நோக்கம், நுகர்வோரே வர்த்தகத்தில் உயர்ந்தவர் என்பதும் நமது நோக்கம். மனித சக்தியையும், பணத்தையும் இயந்திரங்களையும் சாதனங்களையும் நேரத்தையும் சிக்கனமான முறையில் பயன்படுத்துவது ஆரோக்கியமான பொருளாதார கொள்கைக்கு அவசியம். அதை சாதிக்க ஜி.எஸ்.டி. உதவும்.
அதுமட்டுமின்றி ஜி.எஸ்.டி-யின் அடிப்படை, தொழில் நுட்பம் என்பதால் நேரத்தை மீதப்படுத்துவதற்கும் அது உதவும். நுகர்வோர் பணவீக்கத்திற்கு காரணமான பெரும்பாலான அம்சங்கள் ஜி.எஸ்.டி வரம்பிற்கு வெளியே வைக்கப்பட்டுள்ளன. லஞ்ச ஊழலை குறைக்கவும் வரி வசூலை அதிகரிக்கவும் அதற்கான செலவை குறைக்கவும் ஜி.எஸ்.டி பேருதவியாக இருக்கும்.
ஜி.எஸ்.டி மூலம் சிறு வணிகம் அமோக ஆதாயம் பெறுவதுடன் பாதுகாப்பான உணர்வையும் பெறும்.
***
Today is 8th August. Under the leadership of Mahatma Gandhi, the Quit India movement began: PM @narendramodi in the Lok Sabha
— PMO India (@PMOIndia) August 8, 2016
Today, an important move to free the nation from tax terrorism has begun: PM @narendramodi in the Lok Sabha
— PMO India (@PMOIndia) August 8, 2016
Want to thank all parties, state governments. We are taking a decision which RS, LS, States have thought about in great detail: PM in LS
— PMO India (@PMOIndia) August 8, 2016
This can't be seen as a victory of a party or government, it is a win for the democratic ethos of India & a victory for everyone: PM in LS
— PMO India (@PMOIndia) August 8, 2016
Great Step by Team India, Great Step towards Transformation, Great Steps towards Transparency, this is GST: PM @narendramodi in Lok Sabha
— PMO India (@PMOIndia) August 8, 2016
Having been a CM, now it became easier for me to address issues that CMs could have faced with the GST: PM @narendramodi in the Lok Sabha
— PMO India (@PMOIndia) August 8, 2016
Lot of flaws have been overcome as far as the GST is concerned: PM @narendramodi
— PMO India (@PMOIndia) August 8, 2016
Had met both Sonia ji and Manmohan ji. One is a LS MP and other RS MP. Question of treating LS as junior house does not arise: PM in LS
— PMO India (@PMOIndia) August 8, 2016
Rashtraneeti is bigger than Rajneeti: PM @narendramodi in the Lok Sabha #TransformingIndia
— PMO India (@PMOIndia) August 8, 2016
Consumer & small businesses will gain tremendously. Small business will feel more secure with this. Small business is our strength: PM in LS
— PMO India (@PMOIndia) August 8, 2016
Economic and educational empowerment of the poor is what we are focusing on, so that we can mitigate poverty: PM @narendramodi in Lok Sabha
— PMO India (@PMOIndia) August 8, 2016