Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மக்களின் மீது நம்பிக்கை வையுங்கள் : இந்திய வருவாய் சேவை பயிற்சி அலுவலர்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

மக்களின் மீது நம்பிக்கை வையுங்கள் : இந்திய வருவாய் சேவை பயிற்சி அலுவலர்களுக்கு பிரதமர் வேண்டுகோள்


இந்திய வருவாய் சேவையைச் சேர்ந்த 167 பயிற்சி அலுவலர்கள் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தனர்.

இந்த பயிற்சியாளர்களுடன் பேசிய பிரதமர், அவர்களது பணியின்போது, இந்திய மக்களின் மீதான நம்பிக்கை உணர்வை தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்று பிரதமர் அவர்களை கேட்டுக் கொண்டார். நாட்டின் பெரும்பாலான மக்கள் சட்டத்திற்கு அஞ்சி நடப்பவர்கள்தான் என்றும் நாட்டின் நலனைக் கருதி சட்டத்தை பின்பற்ற விரும்புவர்கள்தான் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். அரசின் வருவாய்க்கான கொள்கையை நிறுவேற்றுவது என்ற அவர்களின் கடமையை நிறைவேற்றும் நேரத்திலும் கூட அலுவலர்கள் நேர்மையான வரிசெலுத்துவோரை எவ்வகையிலும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மக்களுக்குச் சாதகமான அரசின் முன்முயற்சிகள் அனைத்தையும் முன்னுரிமை அடிப்படையில் மக்களிடம் கொண்டு செல்வதை அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

இளம் பயிற்சியாளர்களின் தொடர்ச்சியான கேள்விகளுக்கு பதிலளிக்கையில், இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தனது குடும்பத்தில் ஒருவர் என்ற உணர்வு அலுவலர்களிடம் இருக்க வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார். இத்தகைய ஓர் உணர்வு இருக்குமேயானால், உற்சாகமாகவும், வேகமாகவும் அலுவலர்களால் பணியாற்ற முடியும் என்றும், சோர்வு என்பதே எப்போதும் இருக்காது என்றும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, உணர்வு பூர்வமாகவும், மனிதத் தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டிய அவசியம் பொது மக்களின் சேவகர்களான அவர்களுக்கு உள்ளது என்பதை விளக்கும் வகையில் தனது சொந்த வாழ்விலும், அரசியல் அனுபவத்திலும் நடந்த பல பழைய சம்பவங்களை பிரதமர் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.